Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dhanush: அந்த படத்தில் நடிக்கும்போது தயங்கினேன்.. நடிக்கவே இல்லை என்று சொல்லிவிட்டேன் – தனுஷ் ஓபன் டாக்!

Dhanush Pudhupettai Acting Reluctance: பான் இந்தியா வரை பிரபலமான நடிகராக இருந்துவருபவர்தான் தனுஷ். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இந்நிலையில் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசிய தனுஷ், தான் நடிக்க தயங்கிய படம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

Dhanush: அந்த படத்தில் நடிக்கும்போது தயங்கினேன்.. நடிக்கவே இல்லை என்று சொல்லிவிட்டேன் – தனுஷ் ஓபன் டாக்!
தனுஷ்Image Source: Social media
Barath Murugan
Barath Murugan | Published: 09 Jan 2026 08:30 AM IST

நடிகர் தனுஷ் (Dhanush) நடிப்பில் பான் இந்திய மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. மேலும் இயக்குநர் குடும்பத்தில் பிறந்த இவரும் படங்களில் நடிப்பதைத் தொடர்ந்து இயக்குநராகவும் படங்களை இயக்கிவருகிறார். இவரின் இயக்கத்தில் மட்டும் இதுவரை மொத்தமாக 4 படங்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இவரின் இயக்கத்தில் வெளியான படங்கள் தமிழ் மக்களிடையே சிறப்பான வரவேற்பையே பெற்றிருந்தது. நடிகர் தனுஷின் நடிப்பில் இறுதியாக தேரே இஷ்க் மே (Tere Ishq Mein) என்ற இந்தி படம் வெளியாகியிருந்தது. கடந்த 2025 நவம்பர் மாதத்தில் வெளியான இப்படம் இந்தி மொழியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படமானது கடந்த 2025ல் தனுஷின் நடிப்பில் வெளியாகிய படங்களில் அதிக வசூல் செய்த படமாகவே அமைந்திருந்தது.

மேலும் தனுஷ் தற்போது புது புது படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகிவருகிறார். இந்நிலையில் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், தனது புதுப்பேட்டை (Pudhupettai ) படத்தில் நடிக்க தயங்கியது குறித்தும், நடிக்கமாட்டேன் என இயக்குநரும், தனது சகோதரருமான செல்வராகவனிடம் (Selvaraghavan) சொன்னது குறித்தும் மனம் திறந்துள்ளார்.

இதையும் படிங்க: சிலம்பரசனுக்கு ரொம்பவும் பிடித்த நடிகைகள் இவர்கள்தான் – வெங்கட் பிரபு உடைத்த உண்மை!

நடிகர் தனுஷின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Dhanush (@dhanushkraja)

புதுப்பேட்டை படத்தில் ஆரம்பத்தில் நடிக்க தயங்கியது குறித்து தனுஷ் பேச்சு :

அந்த நேர்காணலில் பேசிய தனுஷ், “நான் புதுப்பேட்டை படத்தில் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரைக்கும் செல்வராகவனைப் போல நடித்துதான் காட்டினேன். செல்வராகவன் அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து நடித்து காட்டுவார், அதில் நீங்க ஒரு 10 சதவீதம் செய்தாலே பாஸ். ஆரம்பத்தில் நடிப்பதற்கு தயங்கினேன். சொல்லப்போனால் நடிக்கமாட்டேன் என்றும் கூறினேன். அவரிடம் நான், ஒரு டானின் கதை என சொல்லுகிறீர்கள், நான் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறேன்.

இதையும் படிங்க: தனுஷின் D 56 படத்திற்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்? வைரலாகும் தகவல்

என்னால் எப்படி பண்ணமுடியும் என கேட்டேன். அப்போது என்னை பாலகுமாரன் சார் என்னை அழைத்து பேசினார். உடனே பாலகுமாரன் சார் என்னிடம், “நீ ஏன் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்ற, எப்படி இருப்பார்கள் என பார்த்திருக்கியா? ஒல்லியாத்தான் இருப்பான். நீ தான் இந்த படத்தில் பண்ணனும், அப்போதுதான் இந்த படம் ஒரிஜினலாக இருக்கும்” என அவர் என்னிடம் கூறினார். மேலும் அந்த கதாபாத்திரம் பண்ண பாலகுமாரன் சார்தான் தைரியம் கொடுத்தார் என அதில் தனுஷ் வெளிப்படையாக பேசியிருந்தார்.