Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Samantha: ஆக்ஷன் கதாநாயகியாக சமந்தா.. வெளியானது ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

Maa Inti Bangaram Movie First Look: தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் சமந்தா ரூத் பிரபு. இவரின் நடிப்பில் மிக பிரம்மாண்டமான கதையில் தயாராகிவரும் படம்தான் மா இன்டி பங்காரம். இதை சமந்தாவே தயாரிக்கும் நிலையில், தற்போது இப்படத்தின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது.

Samantha: ஆக்ஷன் கதாநாயகியாக சமந்தா.. வெளியானது ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
மா இன்டி பங்காரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Jan 2026 13:46 PM IST

நடிகை சமந்தா ரூத் பிரபுவின் (Samantha Ruth Prabhu) நடிப்பில் தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த படங்களுமே வெளியாகவில்லை. இவருக்கு சில காலமாக உடல்நிலை சரியில்லாத நிலையில், கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக இவரின் நடிப்பில் எந்த படங்களுமே வெளியாகவில்லை. அந்த வகையில் சில வெப் தொடர்கள் மற்றும் படங்களில் கேமியோ வேடத்தில் நடித்துவந்தார். அந்த வகையில் இவர் தற்போது மீண்டும் படத்தில் ஆக்ஷன் கதாநாயகியாகவே களமிறங்கியுள்ளார் அந்த படம்தான் “மா இன்டி பங்காரம்” (Maa Inti Bangaram). இந்த படத்தை ஹோ பேபி (Ho Baby) திரைப்படத்தை இயக்கிய பெண் இயக்குநர் நந்தினி ரெட்டி (Nandini Reddy) இயக்கிவருகிறார். இந்த படத்தின் பூஜைகள் கடந்த 2025 அக்டோபர் இறுதியில் நடைபெற்றிருந்தது.

இந்த படத்தில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்க, அவருடன் குல்ஷன் தேவையா, திகாந்த் போன்ற நடிகர்களும் மிக முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று 20256 ஜனவரி 7ம் தேதியில் படத்தின் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: நான் முழு மனதோடு ஆதரிப்பேன் – ஜன நாயகன் படம் குறித்து பேசிய ஸ்ரீலீலா!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட படக்குழு :

இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் நடிகை சமந்தா சேலையில், ஒரு பேருந்தின் உள்ளே சண்டைக்கு தயாராகியிருப்பது போல உள்ளது. இந்த் போஸ்டரை பார்க்கும்போது நடிகை அனுஷ்காவின் காதி படத்தின் முதல் ப்ரோமோவை நினைவுபடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மா இன்டி பங்காரம் படத்தின் டீசர் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது :

இந்த மா இன்டி பங்காரம் படத்தில் நடிகை சமந்தா ஆதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடித்துள்ளார். இது அவரின் 2 வருட சினிமா பின்னடைவுக்கு பின், மிகப்பெரும் வெற்றி படமாக இருக்கு என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சமந்தாவின் ட்ரலாலா மூவிங் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துவருகிறார். இப்படமானது தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் வெர்ஷனில் என்னை தாலாட்டும் சங்கீதம் பாடல்… இயக்குநர் விக்ரமன் வெளியிட்ட வீடியோ

இந்த படமானது தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் இருக்கும் நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது. அந்த வகையில் இப்படத்தின் டீசர் ட்ரெய்லரை வரும் 2026 ஜனவரி 9ம் தேதியில் காலை 10 மணியளவில் படக்குழு வெளியிடவுள்ளதாம். சமந்தாவின் இப்படத்தின் டீசர் ட்ரைலர் ரிலீஸ் தற்போது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் எவ்வாறு வந்திருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.