Rukmini Vasanth: ‘மெலிசாவாக ருக்மிணி வசந்த்’.. டாக்சிக் பட கேரக்டர் அறிமுக போஸ்டர் வெளியீடு!
Rukmini Vasanth Toxic Movie Character: தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் ருக்மிணி வசந்த். இவரின் நடிப்பில் தொடர்ந்து பல்வேறு படங்கள் தயாராகிவரும் நிலையில், கன்னட சினிமாவில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள டாக்சிக் படத்திலும் மிக முக்க்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட போன்ற சினிமாவில் மிகவும் பேமஸ் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth). இவரின் நடிப்பில் தற்போது மிக பிரம்மாண்ட திரைப்படங்கள் உருவாகிவரும் நிலையில், இவருக்கு ரசிகர்கர்களிடையே வரவேற்பும் மிகவும் அதிகமாக இருந்துவருகிறது. அந்த வகையில் இவர் தமிழில் இறுதியாக சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) மதராஸி (Madharaasi) திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். இப்படம் கடந்த 2025 செப்டம்பர் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களில் இவர் பிசியாக இருந்துவருகிறார். மேலும் நடிகை ருக்மிணி வசந்த், யாஷின் (Yash) டாக்சிக் (Toxic: A Fairy Tale for Grown-Ups) படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இது இவர் நடிக்கு மிக பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் ஒன்றாகும்.
இந்த படத்திலிருந்து ருக்மிணி வசந்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ருக்மிணி வசந்த், “மெலிசா” (MELLISA) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது வெளியான இந்த அறிவிப்பு போஸ்டர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துவருகிறது.




இதையும் படிங்க: 3 நாளில் ஜனநாயகன் ரிலீஸ்.. கோர்ட் படியேறிய விஜய் தரப்பு.. தொடரும் சென்சார் பிரச்னை!
ருக்மிணி வசந்தின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட டாக்சிக் படக்குழு :
Introducing Rukmini Vasanth as MELLISA in – A Toxic Fairy Tale For Grown-Ups@rukminitweets#TOXIC #TOXIConMarch19th #TOXICTheMovie @TheNameIsYash#Nayanthara@humasqureshi @advani_kiara #TaraSutaria #GeetuMohandas @RaviBasrur #RajeevRavi #UjwalKulkarni #TPAbid #MohanBKere… pic.twitter.com/AaxInLYtHa
— KVN Productions (@KvnProductions) January 6, 2026
இந்த டாக்சிக் படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க, கதையை நடிகர் யாஷும் இணைந்து எழுதியுள்ளார். மேலும் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, யாஷும் இணைந்து த்யாரித்துள்ளார். அந்த வகையில் இந்த டாக்சிக் படமானது கிட்டத்தட்ட ரூ 600 முதல் 650 கோடி பட்ஜெட்டில் தயாராகிவருகிறது என கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் நிலையில், முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிலம்பரசனின் அரசன் படத்தில் நடிக்கிறாரா தனுஷ்? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!
இந்த படத்தில் பாடல்களை அனிருத் இசையமைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இப்படமானது வரும் 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 6 மொழிகளில் இப்படம் வெளியாகுவதாக கூறப்படும் நிலையில், இதில் நடிகைகள் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது 80ஸ் காலகட்டத்தில் உள்ள கேங்ஸ்டர்ஸ் கதையில் தயாராகியுள்ள நிலையில், மிக பிரம்மாண்ட எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திவருகிறது.