சிலம்பரசனின் அரசன் படத்தில் நடிக்கிறாரா தனுஷ்? தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!
Kalaipuli S Thanu About Arasan Movie: நடிகர் சிலம்பரசன் மற்றும் வெற்றிமாறனின் கூட்டணியில் மிக பிரம்மாண்டமாக தயாராகிவரும் படம்தான் அரசன். இப்படம் தனுஷின் வட சென்னை பட உலகத்தில் நடைபெறும் கதையை மையமாக கொண்டு உருவாகிவருகிறது. இந்த படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? என்பது குறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தெளிவுபடுத்தியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் தனது திரைக்கதையின் மூலமாக மக்களிடையே மிகவும் பிரபலமான இயக்குநராக இருந்துவருபவர் வெற்றிமாறன் (Vetrimaaran). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட கதைக்களம் கொண்ட படங்கள் தயாராகிவருகிற்து. தனுஷின் (Dhanush) பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்த இவர், தற்போது பல்வேறு நடிகர்களுடன் இணைந்து திரைப்படங்களை இயக்கிவருகிறார். அந்த வகையில் இவர் இணைந்துள்ள புது படம்தான் அரசன் (Arasan). இந்த படத்தில் சிலம்பரசன் (Silambarasan) கதாநாயகனாக நடிக்கும் நிலையில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில் இப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவருகிறது. இந்த படத்தில் சிலம்பரசன், விஜய் சேதுபதி (Vijay Sethupathi) , ஆண்ட்ரியா (Andrea), யோகலட்சுமி மற்றும் டீஜெய் அருணாச்சலம் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துவருகின்றனர்.
இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு (Kalaipuli S. Thanu) கலந்துகொண்டிருந்தார். அதில் அவர் அரசன் படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? இல்லையா? என்பது குறித்து விளக்கமாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: விஜய் சேதுபதிக்கு நான் நாலு கதை சொல்லியிருக்கேன்.. – மிஷ்கின் சொன்ன விஷயம்!
அரசன் திரைப்படம் குறித்து வெளிப்படையாக பேசிய தயாரிப்பாளர் :
கலைப்புலி எஸ் தாணு, “அரசன் படத்தின் கதை, வட சென்னை படத்தில் தனுஷ் சிறை சென்றதில் இருந்து தொடங்கும். இந்த படமானது முற்றிலும் வித்தியாசமான ஆக்ஷன் கதையில் அமைந்துள்ளது. இந்த படத்தில் மற்ற நடிகர்களுடன் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார். சிலம்பரசன் மற்றும் விஜய் சேதுபதியை படத்தில் ஒன்றாக பார்ப்பது மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.
இதையும் படிங்க: மை நியூ லுக்… இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்ட இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான்!
தற்போது படத்தின் ஷூட்டிங் சிறப்பாகவே நடந்துவருகிறது. மேலும் இந்த அரசன் படத்தின் கதை தனித்துவமாக இருக்கும். சிலம்பரசனும் கேரவேனுக்கு செல்வதே இல்லை. அந்தளவிற்கு சரியான நேரத்தில் வந்து சரியாக நடித்து கொடுக்கிறார். இந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரம் இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவுதான் என அவர் அதில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அரசன் திரைப்படம் குறித்து சிலம்பரசன் வெளியிட்ட பதிவு :
Presenting the promo of #Arasan to you all 🙂#ARASANPromo – https://t.co/Jh7WCRRa4n#VetriMaaran @anirudhofficial @theVcreations #VCreations47 @prosathish @RIAZtheboss
— Silambarasan TR (@SilambarasanTR_) October 17, 2025
இந்த அரசன் படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகிவருகிறது. மேலும் இப்படம் இந்த 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.