Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Arasan: அரசனின் எழுச்சி.. அரசன் புரோமோவின் BTS வீடியோவை வெளியிட்ட சிலம்பரசன்!

Behind The Rise of Arasan BTS : நடிகர் சிலம்பரசனின் நடிப்பில் தமிழ் சினிமாவில் உருவாகிவரும் பிரம்மாண்ட திரைப்படம்தான் அரசன். இந்த படத்தின் புரோமோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், புரோமோவின் BTS வீடியோவை நடிகர் சிலம்பரசன் பகிர்ந்துள்ளார். தற்போது இது ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

Arasan: அரசனின் எழுச்சி.. அரசன் புரோமோவின் BTS வீடியோவை வெளியிட்ட சிலம்பரசன்!
அரசன் திரைப்பட ப்ரோமோ BTS வீடியோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 Dec 2025 19:02 PM IST

கோலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர்தான் நடிகர் சிலம்பரசன் (Silambarasan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் இதுவரை 48 படங்கள் வெளியாகியுள்ளது. அதில் இறுதியாக வெளியாகியிருந்த படம் தக் லைஃப் (Thug Life). இப்படத்தை மணிரத்னம் (Mani Ratnam)இயக்க, கமல்ஹாசனுடன் சிலம்பரசன் இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. இதை தொடர்ந்து இவரின் நடிப்பில் தயாராகிவரும் அசாதாரணமான படம்தான் அரசன் (Arasan). இந்த திரைப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கிவருகிறார். இந்த கூட்டணியை ரசிகர்கள் எதிர்பார்க்காத நிலையில், உடனடியாக இணைந்திருந்தது. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க, அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichandar) இசையமைத்துவருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது மதுரை அருகே உள்ள, கோவில்பட்டியில் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் இந்த படத்திற்காக சிலம்பரசன் செய்த விஷயம் மற்றும் இப்படத்தின் புரோமோ உருவாக்கத்தின் காட்சிகள் குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதை சிலம்பரசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: பராசக்தி ரிலீஸ் தேதி குறித்து தயாரிப்பாளர்கள் கூறுவார்கள் – இயக்குநர் சுதா கொங்கரா

 அரசன் திரைப்படம் தொடர்பான எக்ஸ் பதிவு :

அரசன் திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது? கதாநாயகி யார் :

சிலம்பரசனின் அரசன் திரைப்படமானது தனுஷின் வட சென்னை திரைப்படத்தின் பின்னணி கதைக்களத்தில் தயாராகிவருகிறது. இதில் நடிகர் சிலம்பரசன் முக்கிய வேடத்தில் நடித்துவரும் நிலையில், அவருடன் நடிகர்கள் ஆண்ட்ரியா, டூரிஸ்ட் பேமிலி பட நடிகை யோகலட்சுமி உட்பட பிரபலங்கள் நடித்துவருகின்றனர். இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளது யார் என இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. அதன்படி இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை சமந்தாவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: யாஷின் டாக்சிக் படத்தில் இணைந்த கியாரா அத்வானி.. வெளியானது கேரக்டர் அறிமுக போஸ்டர்!

ஆனால் இன்னும் இப்படத்தின் ஷூட்டிங்கில் சமந்தா இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் 2வது கட்ட ஷூட்டிங் சென்னையில் புத்தாண்டு முடிந்ததும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படம் வரும் 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரியில் சிலம்பரசனின் பிறந்தநாளில் இப்படம் குறித்து அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.