Anirudh: படம் வரும்போது இன்னும் பயங்கரமா இருக்கும்.. அரசன் படம் குறித்து கருது தெரிவித்த அனிருத்!
Anirudh About Asaran Movie: தென்னிந்திய சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத் ரவிச்சந்தர். இவர் பான் இந்திய மொழி படங்களுக்கும் இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். அந்த வகையில் முதல் முறையாக வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு இசையமைத்துவருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் அரசன் படம் குறித்து தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander). இவர் நடிகர் தனுஷின் (Dhanush) நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். இதை தொடர்ந்து ஆரம்பத்தில் சிறு சிறு படங்களில் ஒப்பந்தமாகி இசையமைத்துவந்த இவருக்கு முதல் பிரம்மாண்ட படமாக அமைந்திருந்தது கத்தி (Kaththi). இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (AR. Murugadoss) மற்றும் தளபதி விஜயின் (Thalapathy Vijay) கூட்டணியில் வெளியான இப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அந்த வகையில் இவர் தற்போது இந்தி, தெலுங்கு போன்ற மொழி படங்களுக்கும் இசையமைத்துவருகிறார். மேலும் இவர் வெற்றிமாறன் (Vetrimaaran) மற்றும் சிலம்பரசன் (Silambarasan) கூட்டணியில் உருவாகிவரும் அரசன் (Arasan) படத்திற்கு இசையமைத்துவருகிறார். இந்த படத்தின் மூலமாகத்தான் வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசனுடன் முதல் முறையாக இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படமானது வட சென்னை படத்தின் டைம் லைனில் உருவாகிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனிருத், அரசன் படத்தில் வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசனுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து மனம் திறந்துள்ளார்.




இதையும் படிங்க: கிச்சா சுதீப்பின் மார்க் படத்தில் இணைந்த நடிகர் யோகி பாபு – போஸ்டர் வெளியிட்ட படக்குழு
சிலம்பரசன் – வெற்றிமாறனுடன் அரசன் படத்தில் பணியாற்றுவது குறித்து பேசிய அனிருத்:
அந்த நிகழ்ச்சியில் பேசிய அனிருத்தின், “முதலில் அரசன் படத்தின் தீம் பாடலுக்கு எனக்கு அனைவரும் நல்ல ரியாக்ஷன் கொடுத்ததற்கு நன்றி. இந்த் படத்தில்தான் வெற்றிமாறன் சார் மற்றும் சிம்புவுடன் இணைக்கிறேன். எனக்கு ரொம்ப ஸ்பெஷலாக இருக்குறது, மிகவும் வித்தியாசமான ஒரு விதத்தில் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: இனிமேல் அவர் நடிக்க மாட்டாரானு ஒரு வருத்தம் இருக்கு… விஜய் குறித்து எமோஷ்னலாக பேசிய அனிருத்
மேலும் வெற்றிமாறன் சாரின் வித்தியாசமான இயக்கம், அவரின் உதவியுடன் உருவாகிவரும் பாடல்கள் எல்லாமே எனக்கு புது அனுபவமாக இருக்கிறது. மேலும் எனது இசையில் சிலம்பரசனுடன் இணைந்த காம்போ இன்னும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. படம் வரும்போது இன்னும் பயங்கரமாக இருக்கும்” என அனிருத் தெரிவித்திருந்தார்.
அரசன் படத்தில் பணியாற்றுவது குறித்து அனிருத் பேசிய வீடியோ:
“Thanks for the massive response towards #Arasan theme🫶. It’s the first time with #Vetrimaaran sir & first time with #SilambarasanTR, It’s very special & Different🤩. VetriMaaran sir is genius director. Padam varumbothu bayangarama irukum🥵💥”
– #Anirudhpic.twitter.com/kYDn0uBJue— AmuthaBharathi (@CinemaWithAB) December 12, 2025
அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் :
இயக்குநர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அரசன். இந்த படத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி நெகடிவ் வேடத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தனக்கு தயாரிக்கும் நிலையில், கடந்த 2025 டிசம்பர் 9ம் தேதி முதல் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியிருந்தது. இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கோவில்பட்டியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.