Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

D54 Movie: இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் டி54 திரைப்படம்… சூரஜ் வெஞ்சாரமூடு வெளியிட்ட போஸ்ட் வைரல்!

Suraj Venjaramoodu Instagram Post: தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தனுஷ். இவர் கதாநாயகனாக நடித்துவரும் திரைப்படம்தான் டி54. இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த் படத்தில் நடித்துவரும் மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு ஸ்பெஷல் பதிவை வெளியிட்டுள்ளார். இது இணையத்தில் வைரலாகிவருகிறது.

D54 Movie: இறுதிக்கட்ட ஷூட்டிங்கில் டி54 திரைப்படம்… சூரஜ் வெஞ்சாரமூடு வெளியிட்ட போஸ்ட் வைரல்!
தனுஷ், சூரஜ் வெஞ்சாரமூடு மற்றும் விக்னேஷ் ராஜா Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Dec 2025 20:55 PM IST

மலையாள சினிமாவில் சிறப்பான நடிகராக இருந்துவருபவர் சூரஜ் வெஞ்சாரமூடு (Suraj Venjaramoodu). இவர் தமிழில் நடிகர் சீயான் விக்ரமின் (Chiyaan Vikram) நடிப்பில் வெளியான வீர தீர சூரன் 2 (Veera Dheera Sooran2)படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலமாகவே தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகியிருந்தார். அந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் தொடர்ந்த நடித்துவர தொடங்கிவிட்டார். அந்த வகையில் இவர் தனுஷின் (Dhanush) டி54 (D54) திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துவந்தார். இந்த படத்தில் தனுஷ் லீட் நாயகனாக நடிக்க, இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கிவருகிறார். இவர் ஏற்கனவே அசோக் செல்வன் (Ashok Selvan) மற்றும் சரத்குமார் (sarathkumar) நடித்திருந்த போர் தொழில் (Por Thozhil) என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை தொடர்ந்து தனுஷின் இந்த படத்தை இயக்கிவருகிறார். இதில் தனுஷிற்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், தற்போது நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு வெளியிட்ட பதிவு ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த ஜிவி பிரகாஷ்… ‘ஹேப்பி ராஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ!

தனுஷின் டி54 படம் குறித்து நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு :

இந்த பதிவில் நடிகர் சூரஜ் வெஞ்சாரமூடு, நடிகர் தனுஷ், இயக்குநர் விக்னேஷ் ராஜா மற்றும் சினிமோட்டோகிராஃபருக்கு நன்றி செல்லும் விதத்தில் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் இதிலிருந்தே தெரிகிறது, சூரஜ் வெஞ்சாரமூடு டி54 படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டார். மேலும் நடிகர்கள் தனுஷ் மற்றும் மமிதா பைஜூவும் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த படத்தின் சில காட்சிகள் இன்னும் படமாக்கப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் டி54 படத்தின் ரிலீஸ் எப்போது :

இந்த திரைப்படத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயரிட்டுவருகிறார் மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் நிலையில், தனுஷ் இப்படத்தில் சிறப்பு பாடல் ஒன்றை பாடுகிறாராம். இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெறும் நிலையில், எடிட்டிங் பணிகளும் தொடங்கியுள்ளதாம்.

இதையும் படிங்க: பல ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் எடுக்கும் முடிவு.. அட இந்த படத்திற்காகவா?

மேலும் இப்படம் வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிட திட்டமிட்டுவருவதாக தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த படமானது காதல், ஆக்ஷ்ன் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகிவருகிறது என கூறப்படுகிறது.