Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tere Ishq Mein: வசூலை வாரி குவிக்கும் தனுஷின் ‘தேரே இஷ்க் மே’.. இதுவரை உலகளாவிய வசூல் எவ்வளவு தெரியுமா?

Tere Ishq Mein 9 Days Collection: தனுஷின் நடிப்பில் பான் இந்திய மொழியில் வெளியான திரைப்படம் தேரே இஷ்க் மே. அதிரடி காதல் கதைக்களத்தில் வெளியான இது ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படமானது வெளியாகி 9 நாட்கள் முடிவில் உலகளவில் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.

Tere Ishq Mein: வசூலை வாரி குவிக்கும் தனுஷின் ‘தேரே இஷ்க் மே’.. இதுவரை உலகளாவிய வசூல் எவ்வளவு தெரியுமா?
தனுஷின் தேரே இஷ்க் மேImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 Dec 2025 18:29 PM IST

தமிழ் சினிமாவில் சிறந்த நாயகனாக இருந்துவருபவர்தான் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் பான் இந்திய மொழிகளில் கடந்த 2025 நவம்பர் 28ம் தேதியில் வெளியான திரைப்படம்தான் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்தி மொழியில் உருவான இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆனந்த் எல் ராய் (Anand L Rai) இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் ராணுவ விமான வீரராக நடித்துள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கிரித்தி சனோன் (Krithi Sanon) நடித்திருந்தார். இந்த படமானது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பான் இந்திய மொழிகளில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் (AR. Rahman) இசையமைத்திருந்த நிலையில், பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 2025 டிசம்பர் 7ம் தேதியுடன் இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 9 நாட்களை கடந்துள்ளது.

உலகளாவிய வசூலில் மொத்தமாக இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படமானது இதுவரை உலகளாவிய வசூலில் மொத்தமாக சுமார் ரூ 132. 44 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: பூஜையுடன் தொடங்கியது சூர்யா 47 படம்… வைரலாகும் போட்டோ

தேரே இஷ்க் மே திரைப்படத்தின் வசூல் விவரம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

2025ம் ஆண்டில் தனுஷின் நடிப்பில் அதிகம் வசூல் செய்த திரைப்படம்:

தனுஷின் நடிப்பில் 2025ம் ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட 3 திரைப்படங்ககள் வெளியாகியிருந்தது. முதலாவதாக இயக்குநர் சேகர் கமுல்லாவின் இயக்கத்தில் வெளியான குபேரா. இப்படம் கடந்த 2025 ஜூன் மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில் உலகளாவிய வசூலில் சுமார் ரூ 120 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. 2வது வெளியான படம் இட்லி கடை. இந்த படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருந்த நிலையில், கடந்த அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகியிருந்தது. படத்தின் ரிலீஸின்போது கரூர் விவகாரம் பெரியதாக நடந்த நிலையில், இப்படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: அஜித் குமாரை ரேஸ் களத்தில் நேரில் சந்தித்த சிலம்பரசன்.. இரு கோலிவுட் ஸ்டாரின் வீடியோ தற்போது தீயாக பரவல்!

இப்படம் கிட்டத்தட்ட ரூ 80 கோடிகள் வசூல் செய்திருந்ததாம். அந்த வகையில் இந்த 2025ம் ஆண்டில் தனுஷின் நடிப்பில் வெளியான படங்களில் தேரே இஷ்க் மே திரைப்படம்தான் வெறும் 9 நாட்களிலே சுமார் ரூ 132 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும் விரைவில் இப்படம் சுமார் ரூ 150 கோடி வசூலை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷ் இப்படங்களை அடுத்ததாக அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.