கடந்த 2025 ஆம் ஆண்டு மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்றுக் கொண்டிருந்த போது வைரலான மோனாலிசா போன்ஸ்லே, தற்போது தனது திருமணத்தால் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். மத்திய பிரதேசம் கர்கோன் மாவட்டம் மகேஷ்வர் பகுதியை சேர்ந்த மோனாலிசா, சமூக வலைதளங்களில் வைரலான பிறகு திடீரென பிரபலமானார். அவரது வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், மோனாலிசா தனது காதலர் ஃபர்மான் கான் உடன் கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள தம்பானூர் காவல் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.