உலக அளவில் வசூலி கெத்துகாட்டும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன் படம் – அப்டேட் இதோ
Tere Ishk Mein Movie Box Office Collection: நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது திரயரங்குகளில் வெளியாகி உள்ள படம் தேரே இஸ்க் மெய்ன். இந்தப் படம் கடந்த 8 நாட்களில் உலக அளவில் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் இட்லி கடை. இந்தப் படத்தை நடிகர் தனுஷே எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தை திரையரங்குகளில் கொண்டாடிய ரசிகர்கள் ஓடிடியில் வெளியான பிறகும் ரசிகர்கள் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் நடிகர் தனுஷ் நடிப்பில் இதுவரை 3 படங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி முதலாவதாக குபேரா வெளியானது, இரண்டாவதாக இட்லி கடை படம் வெளியானது தொடர்ந்து தற்போது 3-வதாக தேரே இஸ்க் மெய்ன் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்தப் படத்தை இந்தி சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கி உள்ளார். இவர் தான் இந்தி சினிமாவில் முதன்முறையக நடிகர் தனுஷை அறிமுகம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக தேரே இஸ்க் மெய்ன் படத்திற்காக இணைந்துள்ளது. இந்த கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது. லவ் ஆக்ஷன் ட்ராமாவாக வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் வசூலில் பட்டையை கிளப்பி வருகின்றது. அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.




உலக அளவில் வசூலில் பட்டையைக் கிளப்பும் தேரே இஸ்க் மெய்ன்:
இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள தேரே இஸ்க் மெய்ன் படம் கடந்த 28-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 8 நாட்களைக் கடந்துள்ளது. இதுவரை படம் உலக அளவில் ரூபாய் 124.43 கோடிகள் வரை வசூலித்துள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… மீண்டும் இணையும் விஜய் சேதுபதி – அருண்குமார் கூட்டணி… இணையத்தில் கசிந்த தகவல்
தேரே இஸ்க் மெய்ன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The louder the love, the bigger the explosion!💥#TereIshkMein running successfully in cinemas near you, in Hindi, Tamil and Telugu.
Book your tickets now: https://t.co/bhQRYGBCFc@dhanushkraja @kritisanon @arrahman @aanandlrai #BhushanKumar #HimanshuSharma #KrishanKumar… pic.twitter.com/NxaS8zbnrJ
— T-Series (@TSeries) December 6, 2025
Also Read… மெண்டல் மனதில் படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ் குமார் – வைரலாகும் போஸ்ட்