Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கார்த்தியின் வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்கால தடை.. அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்- என்ன காரணம் தெரியுமா?

Vaa Vaathiyaar: கார்த்தியின் நடிப்பில் இந்த 2025ம் வெளியீட்டிற்கு தயாராகிவந்த படம்தான் வா வாத்தியார். இந்த படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி இயக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் கீழ் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்சனைக் காரணமாக, இப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

கார்த்தியின் வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்கால தடை.. அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்- என்ன காரணம் தெரியுமா?
கார்த்தியின் வா வாத்தியார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 04 Dec 2025 14:57 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் இந்த் 2025ம் ஆண்டில் இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராகிவந்த படம்தான் வா வாத்தியார் (Vaa Vaathiyaar) . இந்த படத்தை இயக்குநர் நலன் குமாரசாமி (Nalan Kumaraswamy) இயக்கிய நிலையில், ஸ்டூடியோ க்ரீன் (Studio Green) நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா (Gnanavel Raja) தயாரித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக்கு ஜோடியாக நடிகை க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். இந்த படமானது எம்ஜிஆர் ரசிகர் தொடர்பான ஒரு வித்தியாசமான கதையில் தயாராகியுள்ளது. முதலில் இப்படம் 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியாகவிருந்த நிலையில், பின் 2025 டிசம்பர் 12ம் தேதியில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் (Madras High Court ) இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது தற்போது கார்த்தியின் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது.

இதையும் படிங்க: இயக்குநர் மகன் டூ தமிழ்நாட்டின் தளபதி.. நாயகனாக விஜய் கடந்துவந்த 33 ஆண்டுகள்!

வா வாத்தியார் படத்திற்கு இடைக்கால தடை விதிக்க காரணம்:

இந்த வா வாத்தியார் படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஸ்டூடியோ க்ரீன் என்ற நிறுவனத்தின் கீழ் தயாரியுள்ளார். இந்நிலையில் இவரின் மீது அர்ஜுன்லால் சுந்தர்தாஸ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அந்த வழக்கில், தன்னிடமிருந்து வாங்கிய கடனை வட்டியுடன் சுமார் ரூ 21. 78 கோடிகளை கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிங்க: பராசக்தி பட ஆடியோ லான்ச் எப்போது? அட இந்த பிரபலங்கள் தான் கெஸ்ட்-ஆ?

இந்நிலையில் இந்த மனு இன்று 2025 டிசம்பர் 4ம் தேதியில் விசாரிக்கப்பட்ட நிலையில், இந்த வா வாத்தியார் படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்துள்ளது. மேலும் அர்ஜூன்லாலிடம் இருந்து வாங்கி கடனை வட்டியுடன் கொடுக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த் வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 2025ம் டிசம்பர் 8ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தத்க்கது.

வா வாத்தியார் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

இந்த வா வாத்தியார் படத்தை ரிலீஸ் செய்ய நீதிமன்றம் தடை விதித்த நிலையில், படக்குழு இது தொடர்பான எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் இப்படம் ஏற்கனவே ஒரு முறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட நிலையில், மீண்டும் மாற்றப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. வரும் டிசம்பர் 8ம் தேதிக்குள் இந்த வழக்கு முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.