Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அல்லு அர்ஜுனுக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை இதுவா? வைரலாகும் தகவல்!

Lokesh Kanagaraj And Allu Arjun Movie: தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக திழல்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் அல்லு அர்ஜூனுடன் கூட்டணியில் இணைவதாக கூறப்படும் நிலையில், அவருக்கு சொன்ன கதை தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது. அப்படி இவர்கள் இருவரின் கூட்டணியில் உருவாகும் கதை என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

அல்லு அர்ஜுனுக்கு லோகேஷ் கனகராஜ் சொன்ன கதை இதுவா? வைரலாகும் தகவல்!
லோகேஷ் கனகராஜ் மற்றும் அல்லு அர்ஜுன்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 03 Dec 2025 13:24 PM IST

கோலிவுட் சினிமாவில் பேமஸ் இயக்குநராகவும், தற்போது நடிகராகவும் இருப்பவர்தான் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் கூட்டணியில் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் எல்லாம் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம்தான் கூலி (Coolie). சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth) நடிப்பில் மிக பிரம்மாண்டமாக இப்படம் வெளியான நிலையில், ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக இவர் தற்போது ஹீரோவாக டிசி (DC) என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்த படத்தை அடுத்ததாக உடனே அல்லு அர்ஜூனுடன் (Allu Arjun) புதிய படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜுனுக்கு என்ன கதையை தெரியுமா கூறியிருக்கிறார்.

நடிகர் சூர்யாவை வைத்து எடுக்க நினைத்த திரைப்படமான “இரும்புக் கை மாயாவி” (Irumbu Kai Mayavi) படத்தின் கதையில், மேலும் அதிக மாஸ் காட்சிகளுடன் ஒருவிதமான புதிய கதையை கூறியுள்ளாராம். இது அல்லு அர்ஜுனுக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல் ட்ரெண்டிங்கில் இருந்துவருகிறது.

இதையும் படிங்க: ஷூட்டிங் ஓவர்.. நியூ ரிலீஸ் தேதியை அறிவித்த கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படக்குழு!

லோகேஷ் கனகராஜ் – அல்லு அர்ஜுனின் படத்தை எந்த நிறுவனம் தயாரிகிறது :

இந்த பிரம்மாண்டமான கூட்டணி படம் யாரும் எதிர்பார்க்காத ஒன்றுதான். அல்லு அர்ஜுன் தற்போது AA22 என்ற படத்தில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வெளிநாடுகளில் நடைபெற்று வரும் நிலையில், ஹாலிவுட் பட ரேஞ்சில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வருகிறதாம். இதில் நடிகை தீபிகா படுகோன் ஆக்ஷன் கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு இறுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2027ம் ஆண்டில் வெளியாகாவுள்ளதாம். இந்த படத்தை அடுத்தாகத்தான் அல்லு அர்ஜுன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி படம் உருவாக்வுள்ளதாம்.

இதையும் படிங்க: அஜித்தின் எளிமை மற்றும் பணிவைப் பார்த்து வியந்தேன் – அனுபமா

இணையத்தில் வைரலாக அல்லு அர்ஜுன் – லோகேஷ் கனகராஜ் படம் குறித்த பதிவு :

இந்த படத்தை புஷ்பா 2 , குட் பேட் அக்லி மற்றும் டியூட் போன்ற படங்களை தயாரித்த “மைத்ரி மூவி மேக்கர்ஸ் “என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பார் என்பது உறுதியாகியுள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.