Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

என் ரசிகர்கள் என்னை வழிபாடு செய்வதை நான் விரும்பவில்லை – சிவகார்த்திகேயன்

Actor Sivakarthikeyan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் பேசியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

என் ரசிகர்கள் என்னை வழிபாடு செய்வதை நான் விரும்பவில்லை – சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Dec 2025 13:40 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் மதராஸி. 5 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ் சினிமாவில் இந்தப் படத்தை இயக்கி இருந்ததால் படம் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகர்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பராசக்தி. இந்தப் படத்தை பிரபல இயக்குநர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார். சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகை ஸ்ரீ லீலா நாயகியாக நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராணா டகுபதி, அதர்வா, பேசில் ஜோசஃப், குளப்புள்ளி லீலா, தேவ் ராம்நாத், பிருத்வி ராஜன், குரு சோமசுந்தரம், ஷாஜி சென், பாப்ரி கோஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வருகின்ற 14-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரியரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

என் ரசிகர்கள் என்னை வழிபாடு செய்வதை நான் விரும்பவில்லை:

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் விழாவில் ஒன்றில் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி அவர் கூறியதாவது, என் ரசிகர்கள் என்னை வணங்குவதை நான் விரும்பவில்லை. அவர்கள் கடவுளையும் அவர்களின் பெற்றோரையும் மட்டுமே வணங்க வேண்டும். எனக்கு மிகவும் நட்பு மற்றும் சகோதரத்துவ ரசிகர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால்தான் நான் அவர்களை சகோதர சகோதரிகள் என்று அழைக்கிறேன் என்று சிவகார்த்திகேயன் பேசியது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… சத்யராஜ் உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? ஒரு மாஸ் நடிகர் தான்

இணையத்தில் வைரலாகும் சிவகார்த்திகேயனின் பேச்சு:

Also Read… மலையாள சினிமாவில் இந்த அபயந்தர குட்டவாளி படத்தை மிஸ் செய்யாதீர்கள்