சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் தகவல்
Sivakarthikeyan - Venkat Prabhu Movies: நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் அடுத்ததாக இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan). சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகம் ஆகி தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து ஆரம்ப காலகட்டத்தில் காமெடியை மையமாக கொண்ட கதைகளிலேயே நாயகனாக நடித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அழுத்தமான கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மதராஸி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ லீலா நடித்துள்ளார். படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் பராசக்தி படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படத்தின் ஷூட்டிங் எப்போது?
அதன்படி பராசக்தி படம் வருகின்ற ஜனவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயன் பணியாற்ற உள்ளார். இந்த கூட்டணி குறித்து அறிவிப்பு முன்னதாகவே வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்த்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடங்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… அஜித் குமார் நடிப்பில் வெளியான வேதாளம் படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
— #Sivakarthikeyan is next set to act in a film directed by #VenkatPrabhu. 🎬
— The shooting for this movie will begin after Pongal 2026. 🎉
— In this film, Siva will be playing a character that he has never portrayed before. 🔥
— The movie will be based on a Sci-Fi genre. 🚀🧬
—… pic.twitter.com/wHeJImctsi— Movie Tamil (@_MovieTamil) November 11, 2025
Also Read… வெற்றிநடைபோடும் பைசன் காளமாடன் படம் – கொண்டாட்டத்தில் படக்குழு