Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வெற்றிநடைபோடும் பைசன் காளமாடன் படம் – கொண்டாட்டத்தில் படக்குழு

Bison Kaalamaadan Movie: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் பைசன் காளமாடன். இந்தப் படத்தின் வெற்றியைப் படக்குழு கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

வெற்றிநடைபோடும் பைசன் காளமாடன் படம் – கொண்டாட்டத்தில் படக்குழு
பைசன் காளமாடன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 10 Nov 2025 18:19 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் மாரி செல்வராஜ் (Director Mari selvaraj). சமூகத்தில் நிலவும் சாதிய கொடுமைகளை மையமாக வைத்து தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியானது பைசன் காலமாடன். ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நாயகனாக நடித்து இருந்தார். கபடி வீரர் மனத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இதில் நடிகர் துருவ் விக்ரம் கபடி வீரராக நடித்து இருந்தார்.

துருவ் விக்ரம் இந்த பைசன் காளமாடன் படத்தில் நடித்து இருந்தார் என்று சொல்வதை விட அந்த மனத்தி கனேசனாக வாழ்ந்து இருந்தார் என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு துருவ் விக்ரமின் நடிப்பு மிகவும் இயல்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் கபடி விளையாட வேண்டும் என்பதற்காக 2 வருடங்களுக்கு மேலாக திருநெல்வேலியில் உள்ள கிராமத்தில் தங்கி படத்திற்காக துருவ் விக்ரம் தயரானார். இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

பைசன் காளமாடன் படத்தின் வெற்றியை கொண்டாடும் படக்குழு:

பைசன் காளமாடன் படம் திரையரங்குகளில் வெளியாகி 25 நாட்களைக் கடந்து தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக படக்குழுவினர் அனைவரும் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துக்கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களை இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… பிக்பாஸில் வீட்டு தல டாஸ்கின் போது காயமடைந்த பார்வதி – வைரலாகும் வீடியோ!

இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… ஆண்ட்ரியா ஒரு அழகான சிலை… வர்ணித்து பேசிய விஜய் சேதுபதி!