நீதான் கல்யாணியா? ரோகிணி குறித்த உண்மையை தெரிந்துகொண்ட மீனா – பரபர திருப்பங்களுடன் வெளியான சிறகடிக்க ஆசை சீரியல்
Siragadikka Aasai Serial November 10th to 15 Promo: தமிழில் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த சீரியலில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ட்விஸ்ட் தற்போது ஒளிபரப்பாக உள்ளது.
தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் வெளியாகும் படங்களுக்கும் வெள்ளித்திரையில் உள்ள நடிகர்களுக்கும் கிடைக்கும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைப்பது போல சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கும் சீரியல் நடிகர்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு தொடர்ந்து கிடைத்து வருகின்றது. அந்த வகையில் சின்னத்திரையில் காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 11 மணி வரை தொடர்ந்து சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. முன்பு எல்லாம் குடும்பத்தலைவிகள் மட்டுமே சீரியல்களைப் பார்ப்பார்கள் என்று சொல்லும் நிலை மாறி தற்போது அனைத்து வயதினரும் ஆண்கள் பெண்கள் என அனைவரும் சீரியல்கள் பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என தொடர்ந்து பல சின்னத்திரையில் சீரியல்கள் பல தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல்களுக்கு இடையே டிஆர்பியில் கடும் போட்டி நிலவி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதன்படி டிஆர்பியில் அதிக போட்டிப் போட்டுக்கொள்வது சன் டிவி மற்றும் விஜய் டிவி தான். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. பொதுவாக சீரியல்களைப் பொருத்தவரை பெண் கதாப்பாத்திரம் தான் ரசிகர்களுக்கு அதிகமாகப் பிடிக்கும். ஆனால் இந்த சீரியலில் முத்து என்ற ஆண் கதாப்பாத்திரம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சிறகடிக்க ஆசை சீரியலில் நீண்ட நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த ட்விஸ்ட்:
இந்த சீரியலில் ரோகிணி குறித்த உண்மை எப்போது தெரியவரும் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த வாரத்திற்கான புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ரோகிணி தான் கல்யாணி என்றும் கிருஷின் அம்மா என்பதும் மீனாவிற்கு தெரியவருவது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. இந்த உண்மையை தெரிந்ததும் மீனா ரோகிணியின் கன்னத்தில் பளார் என்று அறையும் காட்சியும் அந்த புரோமோ வீடியோவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து இந்த வாரம் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் சிறகடிக்க ஆசை சீரியல் என்று ரசிகர்கள் ஆவளுடன் காத்திருக்கின்றனர்.




Also Read… இணையத்தை தெறிக்கவிடும் விஜயின் தளபதி கச்சேரி பாடல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
இணையத்தில் கவனம் பெறும் சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ:
Also Read… அது என் சின்ன வயசு கனவு… எமோஷ்னலாக பேசிய ராம் சரண்