Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தரமாக தயாராகும் SK26.. வெங்கட் பிரபுவின் பர்த்டே பார்டியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ!

Venkat Prabhu 50th Birthday: தமிழ் சினிமாவில் சிறப்பான இயக்குநராக இருந்துவருபவர் வெங்கட் பிரபு. இன்று இவர் தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். இந்நிலையில் இவரின் பர்த்டே பார்ட்டி நடைபெற்றிருந்த நிலையில், அதில் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தரமாக தயாராகும் SK26.. வெங்கட் பிரபுவின் பர்த்டே பார்டியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன்.. வைரலாகும் வீடியோ!
வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன்
Barath Murugan
Barath Murugan | Published: 07 Nov 2025 19:12 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபலமிக்க இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் வெங்கட் பிரபு (Venkat Prabhu). இவர் தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர் என பல்வேறு பணிகளை செய்துவருகிறார். அந்த வகையில் இவர் இறுதியாக தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) தி கோட் (The GOAT) என்ற திரைப்படத்தை இயக்க்கியிருந்தார். இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் கலைவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சுமார் ரூ 450 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. அந்த வகையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனும் (Sivakarthikeyan) முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதை அடுத்ததாக தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்தே புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் இன்று 2025ம் நவம்பர் 07 ஆம் தேதியில் இயக்குநர் வெங்கட் பிரபு தனது 50வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.

இந்நிலையில் இவரின் பர்த்டே ஸ்பெஷலாக பார்ட்டி நடைபெற்றிருந்த நிலையில், அதில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ‘மாஸ்க்’ படத்தில் கதாபாத்திரங்கள் இப்படித்தான் அமைந்திருக்கும்.. ஆண்ட்ரியா ஓபன் டாக்!

வெங்கட் பிரபுவின் பர்த்டே பார்ட்டியில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் தொடர்பான வீடியோ :

இந்த வீடியோவில் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் சிவகார்த்திகேயன் பூங்கொத்தை கொடுப்பதுபோல் உள்ளது. பின் வெங்கட் பிரபு புகைப்படம் எடுப்பதற்காக சிவகார்த்திகேயனின் கையை பிடித்து இழுப்பதும் போன்ற சிறிய காட்சிகள் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணி :

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் உருவாகும் படத்தை தற்காலிகமாக SK26 என ரசிகர்கள் அழைத்துவருகிறார்கள். இந்த படத்தை தலைவன் தலைவி திரைப்படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் எப்போது?.. அட அந்த இடத்தில்தான் நடக்கிறதா? வைரலாகும் தகவல்!

அனிருத் தற்போது தொடர்ந்து படங்களில் பிஸியாகிவரும் நிலையில், ஒருவேளை இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும் இசையமைக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஷூடிங் இந்த 2025ம் ஆண்டு டிசம்பர் அல்லது 2026ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என வெங்கட் பிரபு கூறியிருந்தார். இந்த படமானது நகைச்சுவை, ஆக்ஷ்ன் மற்றும் திரில்லர் திரைக்கதையில் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.