Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Parasakthi: ‘அடி அலையே அலையே’… சிவகார்த்திகேயன்- ஸ்ரீலீலாவின் பராசக்தி பட முதல் பாடல் வெளியானது!

Parasakthi Movie First Single: தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவரின் 25வது திரைப்படமாக உருவாகியிருப்பதுதான் பராசக்தி. இப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் திருநாளில் வெளியாகும் நிலையில், இன்று இப்படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அடி அலையே என்ற இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Parasakthi: ‘அடி அலையே அலையே’… சிவகார்த்திகேயன்- ஸ்ரீலீலாவின் பராசக்தி பட முதல் பாடல் வெளியானது!
பராசக்தி பட முதல் பாடல்
Barath Murugan
Barath Murugan | Published: 06 Nov 2025 18:18 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) மற்றும் இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம்தான் பராசக்தி (Parasakthi). இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் SK25 என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படமானது ஆரம்பத்தில் “புறநாநூறு” என அழைக்கப்பட்டுவந்த நிலையில், முதலில் சூர்யாதான் (Suriya) நடிக்கவிருந்தார். பின் சில காரணங்களால் இந்த படத்திலிருந்து அவர் விலகினார். அதன் பிறகுதான் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக தேர்வானார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரவி மோகன் (Ravi Mohan), அதர்வா (Adharvaa) மற்றும் அப்பாஸ் பேசில் ஜோசப் மற்றும் ராணா டகுபதி (Rana Daggubati) உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது கடந்த 1965ம் ஆண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டம் தொடர்பான கதையில் உருவாகியுள்ளது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி. பிரகாஷ் குமார் (GV. Prakash Kumar) இசையமைத்துவருகிறார். அந்த வகையில் தற்போது இப்படத்திலிருந்து “அடி அலையே” (Adi Alaye) என்ற முதல் லிரிக்கல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலில் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலாவின் நடன காட்சிகளும் இடம்பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ஆட்டம் தொடங்கியது… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் முதல் பாடல் தொடர்பான பதிவு :

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் 100வது படம் :

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையமைப்பில் பல்வேறு படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் இவரின் இசையமைப்பில் 100வது திரைப்படமாகத்தான் இந்த பராசக்தி உருவாகிவருகிறது. இவர் சூரரைப்போற்று என்ற படம் முதல் சுதா கொங்ககராவின் படங்களுக்கு இசையமைக்க தொடங்கியுள்ளார்.

இதையும் படிங்க: பைசன் படத்தின் வெற்றியை ஊர் மக்களுக்கு விருந்து வைத்து கொண்டாடிய மாரி செல்வராஜ்

அந்த வகையில் சுதா கொங்கராவுடன் இவருக்கு 2வது படம்தான் பராசக்தி. இந்த பராசக்தி படத்தின் முதல் பாடலை இசையமைப்பாளரும், பாடகருமான சென் ரோல்டன் மற்றும் பாடகி தீ இணைந்து பாடியுள்ளனர். தற்போது இந்த பாடலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

ஜன நாயகனுக்கு போட்டியாக இறங்கும் பராசக்தி :

இந்த பராசக்தி படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. இந்த படத்தின் ரிலீஸிற்கு 6 நாடுகளுக்கு முன்தான், அதாவது ஜனவரி 9ம் தேதியில்தான் தளபதி விஜயின் ஜன நாயகன் வெளியாகிறது. இது விஜயின் கடைசி படம் என கூறப்படும் நிலையில், இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது. இதில் எந்த படம் அதிகம் வசூல் செய்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.