Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இணையத்தை தெறிக்கவிடும் விஜயின் தளபதி கச்சேரி பாடல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Jana Nayagan Movie Thalapathy Kacheri Lyric Video | தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் முதல் சிங்கிள் வீடியோவான தளபதி கச்சேரி பாடலின் லிரிக்கள் வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டு இருந்தது.

இணையத்தை தெறிக்கவிடும் விஜயின் தளபதி கச்சேரி பாடல் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தளபதி கச்சேரி பாடல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 09 Nov 2025 13:10 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் விஜய் (Actor Vijay). தொடர்ந்து தமிழ் சினிமாவில் 68 படங்களில் நடித்துள்ள நடிகர் விஜய்க்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் தற்போது ஒட்டுமொத்த தமிழகமே எதிர்பார்த்து காத்திருக்கும் படம் ஜன நாயகன். இயக்குநர் எச்.வினோத் இந்தப் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 69-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டில் அரசியல் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதால் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்று நடிகர் விஜய் கூறியதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த செய்தியால் அவர்கள் மனம் வாடினாலும் அடுத்ததாக விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ஜன நாயகன் படத்தின் மீது அவர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்‌ஷன் தயாரித்து வருகின்றது. தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் இந்த நிறுவனம் தமிழ் சினிமாவில் தளபதி விஜயின் ஜன நாயகன் படத்தின் மூலம் அறிமுகம் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி, நரேன், மோனிஷா ப்ளெசி, நிழல்கள் ரவி, பாபா பாஸ்கர், டீஜே அருணாசலம், ரேவதி என பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இணையத்தை தெறிக்கவிடும் விஜயின் தளபதி கச்சேரி பாடல்:

இந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் ஜன நாயகன் படத்தில் இருந்து தளபதி கச்சேரி என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ நேற்று 08-ம் தேதி நவம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகி உள்ள இந்தப் பாடலை விஜய் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இந்தப் பாடல் தற்போது வரை 12.5 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளதாக படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Also Read… ஆயிரம் ஜன்னல் வீடு… 18 ஆண்டுகளை நிறைவு செய்தது சூர்யாவின் வேல் படம்!

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பேட் கேர்ள்… டைட்டிலை போல படமும் பேட் தான் – ஓடிடியில் வெளியாகியுள்ள படத்தின் விமர்சனம் இதோ