Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆயிரம் ஜன்னல் வீடு… 18 ஆண்டுகளை நிறைவு செய்தது சூர்யாவின் வேல் படம்!

18 Years Of Vel Movie: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து திரையரங்குகளில் வெளியான வேல் படம் இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

ஆயிரம் ஜன்னல் வீடு… 18 ஆண்டுகளை நிறைவு செய்தது சூர்யாவின் வேல் படம்!
வேல் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Nov 2025 21:23 PM IST

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் மாதம் 2007-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வேல். ஆக்‌ஷன் ட்ராமா பாணியில் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தை இயக்குநர் ஹரி எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா (Actor Suriya) அண்ணன் தம்பி என இரட்டை வேடத்தில் நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் கலாபவன் மணி, அசின், வடிவேலு, சரண் ராஜ், நாசர், லட்சுமி, சரண்யா பொன்வண்ணன், அம்பிகா, ராஜ் கபூர், ஓ.ஏ.கே.சுந்தர், இளவரசன், ஐஸ்வர்யா, சார்லி, தேவதர்ஷினி, சாம்ஸ், வையாபுரி, சிங்கமுத்து, கிரேன் மனோகர், மதன் பாப், எச். உமா பத்மநாபன், சுஜாதா சிவகுமார், கிருஷ்ணமூர்த்தி, செல்லதுரை, சஞ்சீவ் கார்த்திக், விஜய் கணேஷ், மீசை ராஜேந்திரநாத் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ ராஜகாளையம்மன் மீடியாஸ் சார்பாக தயாரிப்பாளர் எம். சிந்தாமணி தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவின் வேல் படத்தின் கதை என்ன?

சரண்யா பொன்வன்னனுக்கு இரட்டை குழந்தைகளாக பிறந்தவர் சூர்யா. இதில் குழந்தையாக இருக்கும் போதே ஒரு குழந்தை காணாமல் போய் நாசரிடம் வளர்ப்பு மகனாக வளர்கிறார். சரண்யாவிடம் வளரும் ஒரு சூர்யா டிடெக்டிவ் ஏஜண்டாகா இருக்கிறார். இவர்கள் இருவரும் பார்க்க ஒரேமாதிரி இருக்கும் இரட்டையர்களாக இருப்பதால் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது பல கேள்விகள் எழுகிறது.

கைக் குழந்தையை தொலைத்த சரண்யா வேதனையில் இருக்கும் போது தத்து எடுத்து வளர்த்த சூர்யாவின் குடும்பத்திற்கு அவரை விட மனமும் வரவில்லை. இந்த நிலையில் சூர்யா வளர்ப்பு மகனாக இருக்கும் வீட்டிற்கும் கலாபவன் மணிக்கும் பரம்பரை பகை இருக்கிறது. இதனை அனைத்தையும் எப்படி சமாளித்து இவர்கள் ஒன்று சேர்ந்தார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… இது தளபதி கச்சேரி நாள்… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட புது வீடியோ!

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்