தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பிக் சர்ப்ரைஸ்!
Jana Nayagan Movie Update: தமிழ் சினிமாவில் சிகரமாக இருந்துவருபவர் தளபதி விஜய். இவரின் நடிப்பில், இறுதி திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக உருவாகியிருப்பது ஜன நாயகன். இது 2026-ல் பொங்கல் பண்டிகையோடு வெளியாகும் நிலையில், ரசிகர்களின் காத்திருப்பிற்கு சிறப்பான சர்ப்ரைஸ் ஒன்று வெளியாகியிருக்கிறது. அது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் அதிக வசூல் ஹிட் திரைப்படங்களை கொடுத்துவருபவர்தான் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் தமிழில் இதுவரை 68 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில் சினிமாவையும் கடந்து தற்போது தமிழக அரசியலில் நுழைந்துள்ளார். இந்த நிலையில் சினிமாவில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்த நிலையில், அவரின் கடைசி திரைப்படமாக தமிழில் உருவாகியிருப்பதுதான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்க, இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார். விஜய்யின் கடைசி திரைப்படத்தை இயக்கும் சிறப்பான வாய்ப்பும் இவருக்கு கிடைத்துள்ளது. இதில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார்.
மேலும் வில்லனாக நடிகர் பாபி தியோல் (Bobby Deol) நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தை குறித்து சிறப்பான அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் இப்படத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட ஆக்ஷ்ன் அதிரடி காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம்.




இதையும் படிங்க: ஆரோமலே படத்தை பார்த்து படக்குழுவை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!
தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் சிறப்பு காட்சிகள்
இந்த ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் மொத்தமாக சுமார் 110 நாட்களில் முடிவடைந்தது. இதில் கிட்டத்தட்ட 80 நாட்கள் ஷூட்டிங் , இப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசுக்காக மட்டும் 80 நாட்கள் ஒதுக்கப்பட்டிருந்ததாம்.
இதையும் படிங்க: நான் பிரதீப்பை ஸ்டாராகத்தான் பார்க்கிறேன்.. பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசிய கவின் ராஜ்!
இந்நிலையில் இப்படத்தின் மொத்தம் 10க்கும் மேற்பட்ட ஆக்ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த ஜன நாயகன் திரைப்படத்தில் ஆக்ஷன், அதிரடி, காதல் மற்றும் அரசியல் என பல்வேறு கலைவைகளுடன் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.
முதல் பாடல் குறித்து ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட பதிவு :
Thalapatheeee 🔥
Entryyy from Nov 8th #Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries #JanaNayagan#JanaNayaganPongal #JanaNayaganFromJan9 pic.twitter.com/ofhWzvzyRx— KVN Productions (@KvnProductions) November 6, 2025
அனிருத்தின் இசையமைப்பில் இந்த ஜன நாயகன் திரைப்படத்தின் பாடல்கள் முதல் பின்னணி இசை வரை மிக பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இதன் முதல் பாடல் கடந்த 2025ம் ஆண்டு தீபாவளியில் வெளியாகவிருந்த நிலையில், கரூர் சம்பவம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் 2025 நவம்பர் 8ம் தேதியில் இப்படத்தின் பாடல் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.