Kavin: நான் பிரதீப்பை ஸ்டாராகத்தான் பார்க்கிறேன்.. பிரதீப் ரங்கநாதன் குறித்து பேசிய கவின் ராஜ்!
Kavin About Pradeep Ranganathans Success: நடிகர் கவின் ராஜ் சின்னத்திரை சீரியல் மூலம் நடிகராக நுழைந்து, தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருந்துவருகிறார். மேலும் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் வளர்ச்சி குறித்து தனது கருத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்கள் லிஸ்டில் உள்ளவர்தான் கவின் ராஜ் (Kavin Raj). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. மேலும் இவரின் படங்கள் தெலுங்கு போன்ற மொழிகளிலும் வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான இவர், தமிழ் சினிமாவில் நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் இவருக்கு பெரிய வரவேற்பை கொடுக்காவிட்டாலும், தொடர்ந்து சினிமாவில் படங்களில் நடிப்பதை நிறுத்தவில்லை. மேலும் லிஃப்ட் (Lift), டாடா (Dada) மற்றும் ஸ்டார் (Star) போன்ற ஹிட் படங்களை கொடுத்து மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் கிஸ் (Kiss).
இப்படம் கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல பாசிடிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) வளர்ச்சி குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: தனுஷ் ரசிகர்களுக்கு D 54 படக்குழு வைத்த கோரிக்கை – என்ன தெரியுமா?
பிரதீப் ரங்கநாதன் குறித்து தனது கருத்தைத் தெரிவித்த கவின் ராஜ்:
அந்த நேர்காணலில் தொகுப்பாளர் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் வளர்ச்சி மற்றும் டியூட் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்துப் பேசியிருந்தார். அது குறித்து தனது கருத்தை பகிர்ந்த கவின், “நான் பிரதீப்பை ஒரு ஸ்டாராகத்தான் பார்க்கிறேன். முதல் படத்திலே அவருக்கு ரூ 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வாசுகி கிடைக்கிறேது. அவர் அந்த படத்தை இயக்கி நடித்திருந்தார். மற்றும் மக்களிடையேயும் மிகவும் பிரபலமானது. அதே விஷயம் 2வது படத்தில் நடக்கும்போது அவர் என்ன செய்திருக்கிறார் என யோசிக்கவேண்டும், அது சாதாரண விஷயம் கிடையாதது. எமர்ஜென்சி நடிகர் என்று சொல்வதில் எனக்கு விருப்பமில்லை.
இதையும் படிங்க: மாயாஜாலம் கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ்… சரத்குமார் பாராட்டு
மேலும் அவரு ஒரு 2 வருடத்திற்குள் சரியான ஒரு திரைப்படத்தை எடுத்து, அதை ரிலீஸ் செய்வதே ஒரு பெரிய சேலஞ். அப்படி இருக்கையில், அந்த படத்தை ரிலீஸ் செய்து அதில் கிடக்கும் கொடுத்து, அவ்வளவு வசூல் செய்து நல்லதாக அமைகிறது என்றால், இடத்தியெல்லாம் சரியாக யோசித்து நடத்தினால் மட்டுமே நடக்கும். பார்வையாளர்களுக்கு பிடித்திருந்தால் மட்டுமே அது தொடர்ந்து அடுத்தடுத்த படங்களுக்கும் தொடரும்” என அதில் கவின் கூறியிருந்தார்.
மாஸ்க் படத்தின் முதல் பாடல் குறித்து கவின் வெளியிட்ட பதிவு :
Manasu rekka molachu parakkudhu yaathae 🙂#MaskFromNov21#KannuMuzhihttps://t.co/m4DHs2n0an
— Kavin (@Kavin_m_0431) November 2, 2025
இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பில் கவின் நடித்துள்ள படம்தான் மாஸ்க். இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடித்து ரிலீசிற்கு தயாராகிவருகிறது. அந்த வகையில் இப்படம் வரும் 2025 டிசம்பர் அல்லது, 2026ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



