நடிகையும், பிரபல நாட்டியக் கலைஞருமான சுதா சந்திரன், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியூட்டும் மர்ம அனுபவங்களை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். தன்னைச் சுற்றியுள்ள சூழலை மிக விரைவாக உணரக்கூடியவர் என்றும், அசாதாரண சக்திகளின் காணப்பட்டால் அதனை தன்னால் உடனடியாக உணர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குஜராத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்த அவர், ஏதோ தவறு நடக்கப் போகிறது என்று உடனே உணர்ந்தேன்.