Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாயாஜாலம் கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ்… சரத்குமார் பாராட்டு

Sarath Kumar about Bison Movie: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் பைசன். இந்தப் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருவது போல பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.

மாயாஜாலம் கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ்… சரத்குமார் பாராட்டு
சரத்குமார்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Nov 2025 12:44 PM IST

கோலிவுட் சினிமாவில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இளைஞர்களின் படங்கள் வரிசையாக வெளியாகி இருந்தது. அதன்படி நடிகர் துருவ் விக்ரம் (Dhruv Vikram) நடிப்பில் பைசன், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் டியூட், நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் டீசல் ஆகியப் படங்கள் கடந்த 17-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மூன்று படங்களும் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும் இதில் பைசன் மற்றும் டியூட் ஆகிய படங்கள் மற்றும் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் டீசல் படம் தடம் தெரியாமல் போனது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் படம் சிறபாக இருப்பதாகவே தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் பைசன் மற்றும் டியூட் ஆகிய படங்கள் ஒரு பக்கம் கலெக்‌ஷனை அள்ளிக்கொண்டிருந்தது.

தொடர்ந்து இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வந்த நிலையில் பைசன் படம் குறித்து பிரபலங்கள் பலர் தங்களது பாராட்டையும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி டியூட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்த நடிகர் சரத்குமார் பைசன் படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜையும் படக்குழுவினரையும் பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

மாயாஜாலம் கொண்ட இயக்குநர் மாரி செல்வராஜ்:

அதன்படி சரத்குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, கடினமான உணர்ச்சிகளையும் உண்மையையும் உறுதியுடனும் தெளிவுடனும் கையாளும் ஒரு மாயாஜாலத்தை கொண்டவர் இயக்குனர் மாரி செல்வராஜ். துருவ் நாயகனாக நடித்துள்ள “பைசன்” என்ற சுவாரஸ்யமான கதையை நேரடியாக விவரிப்பதில், ஒட்டுமொத்த நடிகர்களின் குழுவும் அவருக்கு துணையாக நிற்கிறது. பாராட்டுகள் மாரி செல்வராஜ் மற்றும் குழுவினர் என்று அந்தப் பதிவில் சரத்குமார் தெரிவித்து இருந்தார்.

Also Read… துல்கர் சல்மானின் காந்தா படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ

நடிகர் சரத்குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கேரள அரசின் மாநில விருது வென்றவர்களுக்கு மம்முட்டி சொன்ன விசயம் – வைரலாகும் பதிவு