Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜேசன் சஞ்சய் முதலில் இயக்க ஆசைப்பட்டது அந்த பிரபல நடிகர்தான் – வைரலாகும் தகவல்

Jason Sanjay: தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய். இவருக்கு ஜேசன் சஞ்சை மற்றும் திவ்யா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் படம் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

ஜேசன் சஞ்சய் முதலில் இயக்க ஆசைப்பட்டது அந்த பிரபல நடிகர்தான் – வைரலாகும் தகவல்
ஜேசன் சஞ்சை Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Nov 2025 20:59 PM IST

கோலிவுட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் (Actor Vijay). இவர் முன்னணி நாயகனாக இருக்கும் போதே நடிப்பில் இருந்து விலகி அரசியலில் முழு நேரம் ஈடுபட உள்ளதாக அறிவித்தார். தொடர்ந்து அரசியல் கட்சியை தொடங்கி தற்போது அரசியல் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் தற்போது ஜன நாயகன் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்தப் படம் தான் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அதே நேரத்தில் தனது அரசியல் பணிகளிலும் நடிகர் விஜய் தீவிரமாக ஈட்பட்டு வருகிறார். தொடர்ந்து அரசியல் பணிகளில் கவனம் செலுத்துவதற்காக சினிமாவை விட்டு விலக நடிகர் விஜய் முடிவு செய்துள்ள இந்த வேலையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக காலடி எடுத்து வைத்துள்ளார்.

அதன்படி இவர் தற்போது நடிகர் சந்தீப் கிஷனை நாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அவர் இயக்குநர் அவதாரத்தை கையில் எடுத்துள்ளார். மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடெக்‌ஷன்ஸ் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தனது அறிமுகப் படத்தில் துல்கர் சல்மானை நாயகனாக்க நினைத்த ஜேசன் சஞ்சய்:

இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் தற்போது இயக்கி வரும் படத்தில் முதலில் பிரபல நடிகர் துல்கர் சல்மானை நடிக்க வைக்கவே முடிவு செய்துள்ளார். ஆனால் அந்த கூட்டணி அமையாத காரணத்தினாலேயே அடுத்ததாக தனது படத்தில் நாயகனாக சந்தீப் கிஷனை நடிக்க வைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த மாதம் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

மேலும் இந்தப் படத்திற்கு ஒரு ஆங்கிலப் பெயர் தான் டைட்டிலாக இருக்கும் என்றும், படம் வருகின்ற மார்ச் மாதம் 2026-ம் ஆண்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால் இதுகுறித்து படக்குழு எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… 31 ஆண்டுகளை நிறைவு செய்த நாட்டாமை படம்… நடிகர் சரத்குமாரின் நெகிழ்ச்சிப் பதிவு!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் மார்ஷல் படம் – வைரலாகும் தகவல்