Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

31 ஆண்டுகளை நிறைவு செய்த நாட்டாமை படம்… நடிகர் சரத்குமாரின் நெகிழ்ச்சிப் பதிவு!

31 years of Nattamai Movie: நடிகர் சரத்குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் நாட்டாமை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படம் குறித்து நடிகர் சரத்குமார் வெளிப்படையாக பேசியுள்ளார்.

31 ஆண்டுகளை நிறைவு செய்த நாட்டாமை படம்… நடிகர் சரத்குமாரின் நெகிழ்ச்சிப் பதிவு!
நாட்டாமை படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Nov 2025 20:16 PM IST

நடிகர் சரத்குமார் (Actor Sarathkumar) நடிப்பில் கடந்த 2-ம் தேதி நவம்பர் மாதம் 1994-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நாட்டாமை. இந்தப் படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார் அண்ணன் தம்பி என இரட்டை வேடத்தில் நடிக்க அண்ணன் சரத்குமாருக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடித்து இருந்த நிலையில் தம்பி சரத்குமாருக்கு ஜோடியாக நடிகை மீனா நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஜா ரவீந்திரன், சங்கவி, மனோரமா, கவுண்டமணி, செந்தில், பொன்னம்பலம், பாண்டு, வினு சக்கரவர்த்தி, வைஷ்ணவி, ராணி, விஜயகுமார், ஈரோடு சௌந்தர், ஏ.கே.செந்தில் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 31 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து இருந்தார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

நாட்டாமையாக அடையாளப்படுத்திய படத்தை ரசிகர்கள் கொண்டாடுவது மகிழ்வளிக்கிறது:

இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி 31 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் நடிகர் சரத்குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ் திரையுலகில் கிராமிய பெருமையும், நீதியும், மரபும் கலந்த ஓர் படைப்பு, நாட்டாமை வெளியாகி இன்றுடன் 31 ஆண்டுகள் நிறைவடைந்த போதும், மக்கள் மத்தியில் நாட்டாமையாக அடையாளப்படுத்திய திரைப்படத்தை இன்றளவும் தமிழ் ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடுவது மகிழ்வளிக்கிறது. படக்குழுவிற்கு இத்தருணத்தில் எனது அன்பை பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

Also Read… பராசக்தி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து ஜிவி பிரகாஷ் கொடுத்த சூப்பர் அப்டேட்

நடிகர் சரத்குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மீண்டும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படத்தை இயக்கும் அருண் ராஜா காமராஜ் – ஹீரோ யார் தெரியுமா?