அல்லு அர்ஜுன் வீட்டில் விசேஷம்… வைரலாகும் பதிவு!
Allu Sirish Nayanika engaged: தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய சினிமா குடும்பமாக வலம் வருகிறது அல்லு ஃபேமிலி. இவர்களின் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் சினிமா சார்ந்த வேலைகளையே செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களின் குடும்பத்தில் தற்போது விசேஷம் நடந்துள்ளது குறித்து அல்லு அர்ஜுன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவையே தங்களது கைவசம் வைத்திருக்கும் சினிமா குடும்பங்கள் சில அங்கு உள்ளது. அதில் ஒரு குடும்பம் தான் நடிகர் அல்லு அர்ஜுனின் (Actor Allu Arjun) குடும்பம். இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சினிமாவில் ஏதாவது ஒரு துறையில் மிகப்பெரிய ஆளாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அல்லு அர்ஜுனின் தந்தை மிகப் பெரிய தயாரிப்பாளராக வலம் வரும் நிலையில் அல்லு அர்ஜுனும் அவரது தம்பி அல்லு சிரிஷ் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருகின்றனர். நடிகர் அல்லு அர்ஜுனுக்கு முன்னதாகவே திருமணம் நடைப்பெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் குடும்ப புகைப்படம் அவ்வபோது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. குறிப்பாக அல்லு அர்ஜுன் மகனின் சுட்டித்தனமான வீடியோ தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுளராக வலம் வந்தார் நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி அல்லு சிரிஷ். இவரும் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகர் அல்லு சிரிஷ் கடந்த 2013-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான கௌரவம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நாயகனாக நடித்து வருகிறார். இவரது நட்டிப்பில் கடந்த 2024-ம் ஆண்டு பட்டி என்ற படம் வெளியானது. இது தமிழில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான டெடி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.




நீண்ட நாள் காதலியுடன் அல்லு சிரிஷிற்கு திருமண நிச்சயம் முடிந்தது:
இந்த நிலையில் நடிகர் அல்லு சிரிஷிற்கு திருமண நிச்சயம் முடிந்தது குறித்து அவரது அண்ணன் அல்லு அர்ஜுன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, வீட்டில் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. குடும்பத்தில் ஒரு புதிய சேர்க்கை. இந்த மகிழ்ச்சியான தருணத்திற்காக நாங்கள் சிறிது காலமாக காத்திருக்கிறோம். என் அன்பான சகோதரர் அல்லு சிரிஷுக்கு வாழ்த்துக்கள், மேலும் குடும்பத்திற்கு அன்பான வரவேற்பு நயனிகா. உங்கள் இருவருக்கும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த அழகான புதிய தொடக்கமாக அமைய வாழ்த்துக்கள் என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… மோகன்லாலின் மகள் நாயகியாகும் படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது
அல்லு அர்ஜுன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Grand celebrations at home begin!
A new addition to the family! 💫
We’ve been waiting for this joyful moment for a while…Congratulations to my sweetest brother, @AlluSirish, and a warm welcome to the family, #Nayanika! 🤗
Wishing you both a beautiful new beginning filled… pic.twitter.com/MHJ75xVqYX
— Allu Arjun (@alluarjun) November 1, 2025
Also Read… சியான் 63 படத்தை இயக்கும் அறிமுக இயக்குநர் போடி கே. ராஜ்குமார்!