ஓடிடியில் வெளியாகியுள்ள இட்லி கடை படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
Idli Kadai Movie: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் இட்லி கடை. இந்தப் படத்தை நடிகர் தனுஷே எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் தனுஷ் (Actor Dhanush). கோலிவுட் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி தற்போது ஹாலிவுட் வரை கலக்கி வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் வெளியான இட்லி கடை படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற இட்லி கடை படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியான இட்லி கடை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்ததுடன் படத்தை இயக்கியும் இருந்தார். இவரௌடன் இணைந்து நடிகர்கள் அருண் விஜய், நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், சமுத்ரகனி, பார்த்திபன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இட்லி கடை படம் எப்படி இருக்கிறது?
தனுஷின் தந்தை ராஜ்கிரண் அவர்களது கிராமத்தில் ஒரு இட்லி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது இட்லி கடை அந்த ஊரின் அடையாளமாக இருக்கிறது. தனது தந்தை ஹோட்டல் நடத்துவதைப் பார்த்து தனக்கும் சமையளில் ஆர்வம் ஏற்பட்டு கேட்ரிக் படக்கிறார். தொடர்ந்து தனது அப்பா அதே ஊரில் இருக்கும் நிலையில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறார்.




Also Read… ஜனவரி 2026-ல் வெளியாகும் கருப்பு படம்? வைரலாகும் தகவல்
அங்கு சத்யராஜின் பெரிய 5 ஸ்டார் ஹோட்டலில் பணியாற்றும் இவர் மீது சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டேவிற்கு காதல் ஏற்படுகிறது. ஆனால் அது சத்யராஜின் மகன் அருண் விஜய்க்கு பிடிக்காது. ஒரு கட்டத்தில் ஷாலினி பாண்டே மற்றும் தனுஷிற்கு திருமண ஏற்பாட்டை செய்கிறார் சத்யராஜ்.
திருமணத்திற்கு முன்னதாக தனுஷின் தந்தை ராஜ்கிரன் உயிரிழந்துவிடுகிறார். அவரின் இறுதிச் சடங்கிற்காக சொந்த ஊருக்கு வரும் தனுஷிற்கு அந்த ஊரைவிட்டு திரும்ப செல்ல விருப்பம் இல்லை. மேலும் திருமணமும் நின்றுவிடுகிறது. இதனால் கடுப்பான அருண் விஜய் தனுஷை பழிவாங்குவதற்காக வருகிறார். இறுதியில் பிரச்னைகள் அனைத்தையும் தனுஷ் எப்படி சமாளித்தார் என்பதுதான் படத்தின் கதை.
Also Read… சியான் 63 படத்தை இயக்கும் அறிமுக இயக்குநர் போடி கே. ராஜ்குமார்!