Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜுடன் கைகோர்க்கும் பாலிவுட் நடிகை.. அட இவரா?
Lokesh Kanagarajs Hero Debut Movie:தென்னிந்திய சினிமாவில் தான் இயக்கிய படங்களில் தொடர் வெற்றியை கொடுத்துவருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்குநராக இருந்து, தற்போது படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் பாலிவுட் பிரபல நடிகை நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) கடந்த 2017ம் ஆண்டில் வெளியான மாநகரம் (Maanagaram) என்ற படத்தின் மூலம் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர்கள் ஸ்ரீ மற்றும் சந்தீப் கிஷன் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் இவர்களுக்கு ஓரளவு வரவேற்பை கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக வெளியான படம்தான் கைதி (Kaithi). கார்த்தியின் (Karthi) நடிப்பில் வெளியான இப்படம்தான், லோகேஷ் கனகராஜிற்கு தமிழ் மக்களிடையே மிகவும் வரவேற்பைக் கொடுத்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர், தளபதி விஜய் (Thalapathy Vijay) , கமல்ஹாசன் (kamal Haasan) மற்றும் ரஜினிகாந்த் (Rajinikanth) என உச்ச நடிகர்களுடன் திரைப்படங்களில் இணைந்தார். இந்த பிரபலங்களின் படமும் சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்து, பல கோடி வசூலையும் பெற்றிருந்தது.
இயக்குநராக பல வெற்றிப் படங்களைக் கொடுத்த லோகேஷ், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், நடிகர்களுக்கான தேடுதல் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி (Wamiqa Gabbi) நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.




இதையும் படிங்க: பைசன் படத்தை மணிரத்னம் பாராட்டி அனுப்பிய மெசேஜ்… மாரி செல்வராஜ் சொன்ன விசயம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படம் குறித்து வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Honourable Chief Minister @CMOTamilNadu sir, thank you so much for your wishes and love for #Coolie sir 🤗❤️❤️ pic.twitter.com/4c1ubLizuz
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 13, 2025
லோகேஷ் கனகராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணி :
லோகேஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகும் புதிய படம், ஒரு கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் லோகேஷ் கனகராஜின் கதாபாத்திரத்தின் அமையும் மிக வித்தியாசமாக இருக்கும் என்றும் வட்டாரங்கள் கூறுகிறது. அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே தனுஷின் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை அடுத்து தான் லோகேஷ் கனகராஜுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க: சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி பிரியதர்ஷன்.. எந்த படத்தில் தெரியுமா?
இப்படத்தில் லோகேஷிற்கு ஜோடியாக ஆரம்பத்தில் ஜெயிலர் பட நடிகை மிர்னான் மேனன் நடிப்பதாக கூறப்பட்டது, பின் கூலி படத்தில் நடித்த நடிகை ரட்சிதா ராம் நடிப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் தற்போது பாலிவுட் நடிகை வாமிகா கபி நடிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகளை விரைவில் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் நிலையில், இப்படத்தின் அறிவிப்புகள் இந்த 2025 நவம்பர் இறுதிக்குள் வெளியாகும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.