சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி பிரியதர்ஷன்.. எந்த படத்தில் தெரியுமா?
Sivakarthikeyan New Movie: தென்னிந்திய சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன். இவரின் நடிப்பில் இறுதியாக மதராஸி படமானது வெளியானது. இப்படத்தை புதிய படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கி, பிரம்மாண்ட நடிகராக இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 23 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. இந்த படங்களின் மூலமாக மக்களிடையே நெருங்கிய இடத்தைப் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் மதராஸி (Madharaasi). இப்படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் (AR. Murugadoss) இயக்க, ஸ்ரீ லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனமானது தயாரித்திருந்தது. இப்படம் கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்திருந்தார். இது தமிழில் இவரின் 2வது படமாகும். இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக சிவகார்த்திகேயன் பராசக்தி (Parasakthi) பட ஷூட்டிங்கில் பிசியாக இருந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இப்படத்தை அடுத்ததாக ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் (Kalyani Priyadarshan) கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குநர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை தளபதி விஜயின் (Thalapathi Vijay) கோட் படத்தை இயக்கிய வெங்கட் பிரபுதான் (Venkat Prabhu).




இதையும் படிங்க : பென்ஸ் திரைப்படத்தில் நடிப்பதை உறுதி செய்த நடிகர் நரேன்!
சிவகார்த்திகேயனுடன் 2வது முறையாக இணையும் கல்யாணி பிரியதர்ஷன்:
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் புதிய படமானது உருவாகவுள்ளது. இப்படம் தற்காலிகமாக SK26 என அழைக்கப்பட்டுவருகிறது. இப்படத்தை சத்யஜோதிபிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ள நிலையில், அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து ஏற்கனவே ஹீரோ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: சிரஞ்சீவி படத்தில் நான் நடிக்கிறேனா? மாளவிகா மோகனன் விளக்கம்
இந்த படமானது கடந்த 2019ம் ஆண்டில் இந்த படமானது வெளியான நிலையில், வசூல் ரீதியாக கடுமையான தோல்வியை சந்தித்தது என்றே கூறலாம். இந்த படத்திற்கு பின் வெங்கட் பிரபுவின் கூட்டணி படத்தில் இந்த ஜோடி இணையாகிவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அவறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் பதிவு :
View this post on Instagram
நடிகை கல்யாணி பிரியதர்ஷனின் நடிப்பில் சமீபத்தில் லோகா என்ற படமானது வெளியாகியிருந்தது. அதிரடி சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் வெளியன் இப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்று சுமார் ரூ 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்ததாக தமிழில் இவரின் நடிப்பில் ஜீனி மற்றும் மார்ஷல் என 2 படங்கள் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தத்க்கது.