ஓடிடியில் வெளியானது நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி படம்!
Madharaasi Movie: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. மிகப் பெரிய எதிர்பார்ப்பில் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. காமெடி நடிகராக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி தற்போது நாயகனாக மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் டாப் 10 நாயகன்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது வளர்ச்சி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று கனவுகளுடன் வரும் பல இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகும் படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெறுவது மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருகிறார்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகை ருக்மினி வசந்த் நாயகியாக நடித்து இருந்தார். இவர் தமிழ் சினிமாவில் நடித்த இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் வித்யூத் ஜமாத் வில்லனாக கலக்கியிருந்தார். இவர்களுடன் இணைந்து விக்ராந்த், பிஜூ மேனன், ஷபீர் கல்லாரக்கல், ஆடுகளம் நரேன், சஞ்சய், தலைவாசல் விஜய், சந்தான பாரதி மற்றும் வினோதினி வைத்தியநாதன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.




அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது மதராஸி:
இந்த நிலையில் படம் கடந்த செப்டம்பர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் சார்பாக தயாரிப்பாளர் ஸ்ரீ லக்ஷ்மி பிரசாத் தயாரித்து இருந்தார். இந்தப் படம் உலக அளவில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக முன்னதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. அதன்படி இது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் 100 கோடி ரூபாய் வசூலித்த 4-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் ஓடிடியில் வெளியிடப்பட்டது.
Also Read… Suriya: சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம்.. முதல் இரு படங்கள் இதுதான்!
மதராஸி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Madharaasi is a RAMPAGE at the box office 🔥🔥
Collects a gross of 100 CRORES WORLDWIDE ❤🔥❤🔥
Book your tickets now!
🎟️ https://t.co/DiYIeLdzAt#MadharaasiMadness #Madharaasi#BlockbusterMadharaasi pic.twitter.com/s0ebpKgtRT— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) September 18, 2025
Also Read… Silambarasan: தெலுங்கில் முன்னணி நடிகரின் படத்தில் சிலம்பரசன்?