Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Idli kadai: தனுஷின் இட்லி கடை ரிலீஸ்.. வைரலாகும் மேக்கிங் வீடியோ!

Idli Kadai Making Video: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் மற்றும் இயக்குநராகவும் மிகவும் பிரபலமாகி வருபவர் தனுஷ். இவரின் இயக்கத்தில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் இட்லி கடை. இந்த படமானது 2025 அக்டோபர் 1ம் தேதிமுதல் வெளியாகவுள்ள நிலையில், படக்குழு இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.

Idli kadai:  தனுஷின் இட்லி கடை ரிலீஸ்.. வைரலாகும் மேக்கிங் வீடியோ!
இட்லி கடை பட மேக்கிங் வீடியோImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Sep 2025 12:15 PM IST

நடிகர் தனுஷ் (Dhanush) தமிழ் சினிமாவில் வெறும் நடிகராக மட்டுமில்லாமல் இயக்கம், தயாரிப்பு உட்பட பல்வேறு விஷயங்களை சிறப்பாக செய்து வருகிறார். இவரின் இயக்கத்தில் இதுவரை 3 படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், நான்காவதாக தயாராகியிருக்கும் படம்தான் இட்லி கடை (Idli Kadai). இந்த படத்தில் நடிகர் தனுஷே ஹீரோவாக நடித்திருக்கிறார். தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வவுண்டர் பிலிம்ஸ் நிறுவனத்துடன், டான் பிக்ச்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த இட்லி கடை படமானது மண்வாசம் வீசும் கிராமத்து கதைக்களத்துடன் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இப்படத்தின் தனுஷிற்கு எதிர் கதாபாத்திரத்தில் அருண் விஜய் (Arun Vijay) நடித்துள்ளார்.

பிரம்மாண்ட நடிகர்களின் கூட்டணியில், இந்த இட்லி கடை படமானது தயாராகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது நாளை 2025 அக்டோபர் 1ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க : AK64 படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி.. அஜித் குமார் கொடுத்த அப்டேட் இதோ!

தனுஷின் இட்லி கடை படக்குழு வெளியிட்ட மேக்கிங் வீடியோ தொடர்பான பதிவு :\

தனுஷின் இட்லி கடை படத்தின் FDFS தமிழகத்தில் எப்போது :

நடிகர் தனுஷ் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அவருடன் நடிகர்கள் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய், சமுத்திரக்கனி, ஆர்.பார்த்திபன், சத்யராஜ், ராஜ்கிரண் மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது உணவகங்களுக்கு இடையே நடக்கும் மோதல் மற்றும் அப்பாவின் ஆசை தொடர்பான எமோஷனல் கதைக்களத்தில் தயாராகியுள்ளது.

இதையும் படிங்க : சாய் ப்ரோ பிஜிஎம் அனிருத்துக்கும் மேல.. ரசிகரின் பேச்சிற்கு சாய் அபயங்கரின் ரியாக்ஷ்ன்.. வைரலாகும் வீடியோ!

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் நிலையில், பாடல்கள் அனைத்தும் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்த படமானது  2025 அக்டோபர் 1ம் தேதியில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வெளியாகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இந்த படமானது அக்டோபர் 1ம் தேதியில் காலை 9 மணி காட்சிகள் முதல் வெளியாகவுள்ளதாம். மேலும் கர்நாடகா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் காலை 6:30 காட்சிகள் முதல் இட்லி கடை படமானது வெளியாகவுள்ளது. இது தொடர்பான தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிற்து.