Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Idli Kadai: மண்வாசம் வீசும் கிராமத்து கதையில்.. தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் டிக்கெட் புக்கிங் தொடக்கம்!

Idli Kadai Movie Ticket Booking: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் முன்னணி இயக்கத்திலும் மற்றும் நடிப்பிலும் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம் இட்லி கடை. இந்த படம் வரும் 2025 அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகும் நிலையில், படத்தின் ப்ரீ- புக்கிங் தொடங்கியுள்ளது.

Idli Kadai: மண்வாசம் வீசும் கிராமத்து கதையில்.. தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் டிக்கெட் புக்கிங் தொடக்கம்!
தனுஷின் இட்லி கடை திரைப்படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Sep 2025 15:36 PM IST

நடிகர் தனுஷின் (Dhanush) இயக்கத்தில் 4வது உருவாகியிருக்கும் திரைப்படம்தான் இட்லி கடை (Idli Kadai). இந்த படத்தை தனுஷ் இயக்கி, இதில் அவரே முன்னணி ஹீரோவாகவும் நடித்துள்ளார். இவரின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 1ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க, இதில் வில்லன் வேடத்தில் முன்னணி நடிகர் அருண் விஜய் (Arun Vijay) நடித்துள்ளார். மேலும் தனுஷிற்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் (Nithay Menen) மற்றும் ஷாலினி பாண்டே என இரு கதாநாயகிகள் நடித்திருக்கின்றனர். அசத்தல் மண்வாசம் வீசும் கிராமத்து கதைக்களத்தில் இந்த படமானது மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி இணையதளங்களில் சிறப்பான வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கிய நிலையில், இப்படத்தின் ப்ரீ- புக்கிங் தொடங்கியுள்ளது. தனுஷின் இட்லி கடை படத்தின் ப்ரீ-புக்கிங் இன்று 2025 செப்டம்பர் 27ம் தேதியில், மதியம் 2 : 30 மணியளவில் ஓபனாகியுள்ளது. மேலும் ரசிகர்களும் ஆர்வமுடன் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : லோகா சாப்டர் 2 குறித்த அறிவிப்பை வெளியிட்ட துல்கர் சல்மான்

இட்லி கடை டிக்கெட் புக்கிங் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

தனுஷின் இந்த இட்லி கடை படத்தின் கதைக்களமானது, தனது சொந்த உணவகத்தை விட்டு, வெளிநாட்டில் பிரமாண்ட உணவகத்தில் பணிபுரியும் மகன். தனது தந்தையின் உணவகத்தை மீண்டும் எவ்வாறு எடுத்து நடத்துகிறார் என்பது குறித்த கதையாகும். இந்த கதையில் அந்த பெரிய உணவகத்திற்கும், தனுஷின் சொந்த உணவகத்திற்கு இருக்கும் பிரச்சனை இப்படத்தின் மையக்கருவாகும்.

இதையும் படிங்க : சிலம்பரசனின் ‘STR49’ படத்தின் புரோமோ வீடியோ – ரிலீஸ் எப்போது தெரியுமா?

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடித்துள்ளார். மேலும் தனுஷை காதலிக்கும் பெண் வேடத்தில் நடிகை ஷாலினி பாண்டே நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பிளான கதையில், மாறுபட்ட கதாபாத்திரங்களை வைத்து நடிகர் தன்சுஹ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

தனுஷின் புதிய படங்கள் :

இட்லி கடை படத்தை அடுத்தாக தனுஷின் கைவசத்தில் கிட்டத்தட்ட 7 படங்கள் வீதம் உள்ளது. தெலுங்கில் ஒரு படமும், இந்தியில் தேரே இஷ்க் மெய்ன் என்ற திரைப்படம், இளையராஜா பயோ பிக், அப்துல்கலாம் பயோபிக், மற்றும் டி54, டி55, டி56 என வரிசையாக தொடர்ந்து படங்களில் தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படங்களின் ஷூட்டிங்கும் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. மேலும் தனுஷ், இயக்குநர் விக்னேஷ் ராஜாவின் இயக்கத்தில் உருவாகிவரும் டி54 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.