நானியின் பாரடைஸ் படத்தில் இணைந்த நடிகர் மோகன் பாபு
The Paradise: நடிகர் நானியின் நடிப்பில் இறுதியாக ஹிட் தி தர்ட் கேஸ் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது தி பாரடைஸ் படத்தில் நடிகர் நானி விறுவிறுப்பாக நடித்து வரும் நிலையில் இந்தப் படத்தில் நடிகர் மோகன் பாபு இணைந்துள்ளதை அறிவித்துள்ளனர்.

நடிகர் நானி (Actor Nani) தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அதன்படி ரசிகர்களால் நேச்சுரல் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். அதன்படி இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தெலுங்கு ரசிகர்களிடையே மட்டும் இன்றி பான் இந்திய அளவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இந்த ஆண்டு நடிகர் நானியின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ஹிட் தி தர்ட் கேஸ். இந்தப் படம் கடந்த 1-ம் தேதி மே மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியகாவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது நடிகர் நானி நடித்து வரும் படம் தி பாரடைஸ்.
பீரியாடிக் ஆக்ஷன் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தப் படத்தை ஸ்ரீகாந்த் ஒடேலா எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகின்றது. அதன்படி படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வருகின்றது. மேலும் இந்தப் படம் வருகின்ற மார்ச் மாதம் 26-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு முன்னதாகவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.




தி பாரடைஸ் படத்தில் இணைந்த நடிகர் மோகன் பாபு:
அதன்படி தெலுங்கு சினிமாவில் பழம்பெரும் நடிகராக இருப்பவர் நடிகர் மோகன் பாபு இவர் நடிகராக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் பல சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் நானியின் நடிப்பில் உருவாகி வரும் தி பாரடைஸ் படத்தில் நடிகர் மோகன் பாபு இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
Also Read… என்னுடைய படைப்புகளில் சிறந்ததாக இருக்கும் 96 பாகம் 2 – இயக்குநர் பிரேம் குமார்
நடிகர் நானி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram