சூர்யாவின் கருப்பு படம் குறித்து வைரலாகும் முக்கிய தகவல்!
Karuppu Movie: நடிகர் சூர்யா நடிப்பில் ரசிகர்கள் தற்போது அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

நடிகர் சூர்யா (Actor Suriya) கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அதன்படி நடிகர் சூர்யாவின் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ரெட்ரோ. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் பிறகு அடுத்ததாக நடிகர் சூர்யா நடிப்பில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படத்தை இயக்குநரும் நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கி ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியுள்ளது. படம் எப்போது திரையரங்களில் வெளியாகும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்களும் தொடர்ந்து ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
மேலும் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்து இருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது. கிராமத்தில் பிறந்து வளர்ந்த நபர் வழக்கறிஞராக பல சட்டப் போராட்டங்களை நடத்துவது போல தெரிந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். இவர்களின் ஜோடி பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.




கருப்பு படத்தில் நிறைய நீதிமன்ற காட்சிகள் இருக்கும்:
இந்த நிலையில் சமீபத்தில் சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலின்படி கருப்பு படத்தில் நிறைய நீதிமன்ற காட்சிகள் இருக்கும் என்றும் அதனை மிகவும் சிறப்பாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பொதுவாக ஆர்.ஜே.பாலாஜி படம் என்றாலே ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு இருக்கும். அவரது படங்கள் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
மேலும் படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படம் தீபவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்தும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
#Suriya‘s #Karuppu will have a lot of court scenes. #RJBalaji has captured it superbly…..💥
“The film turned out very well..🥁 pic.twitter.com/op5lYuP2RA
— Movie Tamil (@_MovieTamil) September 24, 2025
Also Read… என்னுடைய படைப்புகளில் சிறந்ததாக இருக்கும் 96 பாகம் 2 – இயக்குநர் பிரேம் குமார்