Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ப்ளூ ஸ்டார் படத்திற்காக விருதை வென்ற சாந்தனு – வைரலாகும் போட்டோஸ்

Actor Shanthanu: கோலிவுட் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகம் ஆனவர் சாந்தனு பாக்யராஜ். பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜின் மகனாக குழந்தை நட்சத்திரமாகவே தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆனா சாந்தனு பாக்யராஜ் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றே சொல்லலாம்.

ப்ளூ ஸ்டார் படத்திற்காக விருதை வென்ற சாந்தனு – வைரலாகும் போட்டோஸ்
சாந்தனுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Sep 2025 15:19 PM IST

இயக்குநர் பாக்யராஜின் மகனாக சிறு வயதிலேயே சினிமாவிற்கு வந்தார் நடிகர் சாந்தனு (Actor Shanthanu). குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவரை சோனு என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து சினிமாவில் இவர் நாயகனாக பெரிய அளவில் சோபிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நாயகனாக நடித்தாலும் இவரது படங்கள் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தொடர்ந்து நாயகனாக நடிப்பதில் இருந்து விலகி இரண்டாம் நாயகன் மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிகர் சாந்தனு நடிக்கத் தொடங்கினார். அப்படி அவர் நடித்த கதாப்பாத்திரங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெறத் தொடங்கியது. அதன்படி நடிகர் சாந்தனு பாக்யராஜ் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ம் தேதி வெளியான ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்து இருந்தார்.

இதில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகர் சாந்தனு இரண்டாம் நாயகனாக நடித்து இருந்தார். கிராமத்தில் இரு பிரிவினர் இடையே கிரிக்கெட் விளையாடுவதில் மோதல் ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்ததற்காக நடிகர் சாந்தனுவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. அதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவை வெளியிட்டுள்ளார்.

ப்ளூ ஸ்டார் குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட சாந்தனு:

கனடா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் ப்ளூ ஸ்டார் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்றது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் எனக்கு ஒரு கதாபாத்திரத்தை விட அதிகமாக கொடுத்தது – இது எனக்கு வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும் நினைவுகள், பாடங்கள் மற்றும் அன்பைக் கொடுத்தது. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நன்றி பா ரஞ்சித் அண்ணா மற்றும் என் இயக்குனர் ஜெயக்குமார், என் சக நடிகர்கள், என் அன்பானவர்கள் அசோக் செல்வன் மற்றும் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றி என்று நடிகர் சாந்தனு அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Also Read… சைமா விருதுகளுடன் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் – இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்!

நடிகர் சாந்தனு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சக்திமான் படத்திற்காக பேசில் ஜோசப் 2 வருசம் காத்திருந்தார் – அனுராக் காஷ்யப்