Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சாந்தனு போல் ஒரு நடிகர் அரிது.. நடிகர் ஷேன் நிகம் புகழாரம்!

Shane Nigam Praises Shanthanu: பிரபல மலையாள நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஷேன் நிகம். இவர் ஆர்.டி.எக்ஸ் என்ற படத்தில் நடித்து மூலம் தென்னிந்தியாவில் பிரபலமானார். மேலும் இவரின் நடிப்பில் பல்டி படமானது வெளியாக காத்திருக்கும். இந்நிலையில், இப்படத்தின் தமிழ் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய ஷேன் நிகம், நடிகர் சந்தனுவை புகழ்ந்து பேசியுள்ளார்.

சாந்தனு போல் ஒரு நடிகர் அரிது.. நடிகர் ஷேன் நிகம் புகழாரம்!
சாந்தனு பாக்யராஜ் மற்றும் ஷேன் நிகம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Sep 2025 07:30 AM IST

இந்திய சினிமாவில் தற்போது மிகவும் பிரபலமான திரையுலகமாக இருந்து வருவது மலையாளம் சினிமாதான் (Malayalam cinema). இந்த சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்கள் வெளியாகி, ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையையும் தனது பக்கம் ஈர்த்து வருகிறது. அப்படிப்பட்ட சினிமாவில், பிரபல இளம் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஷேன் நிகம் (Shane Nigam). இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகியிருக்கிறது, அதில் இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபலம் கொடுத்த படம் ஆர்.டி.எக்ஸ். இந்த படத்தை தொடர்ந்து, பல படங்களிலும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் வரும் 2025 செப்டம்பர் 26ம் தேதியில் வெளியாகி காத்திருக்கும் படம்தான் பல்டி (Balti).

இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ஷேன் நிகம், நடிகர் சாந்தனுவை (Shanthanu Bhagyaraj) புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசியது பற்றி விவரமாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : மீண்டும் நெட்பிளிக்ஸில் வெளியான ‘குட் பேட் அக்லி’… படத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்னென்ன தெரியுமா?

சாந்தனுவை புகழ்ந்து பேசிய நடிகர் ஷேன் நிகம் :

சமீபத்தில் தமிழ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ஷேன் நிகம், அதில், “பல்டி படமானது ஒரு ஸ்போட்ஸ் ஆக்ஷன் டிராமா படமாக இருக்கும். இந்த படத்தில் 4 பசங்க, அவர்களில் கபடி குழு பற்றிய கதையில் உள்ளது. இதில் வில்லன் வந்தால் எந்த அளவிற்கு போராட்டங்கள் இருக்கும் என்பது இப்படத்தின் மையக்கரு. மேலும் பின்னு சேட்டா மற்றும் சாந்தனு செட்டாவிற்க்கு மிக்க நன்றி. மேலும் இப்படத்தில் செல்வராகவன் சார் நன்றாக நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க : அனிருத் கூட நான் போட்டி போடுறனா? சாய் அபயங்கர் சொன்ன விசயம்

அவரின் மிக பெரிய ரசிகன் நான், அவரின் புதுப்பேட்டை படத்தை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். மேலும் நடிகர் சந்தனு மாதிரியாக ஆர்வமுடன் நடிப்பவர்களை பார்ப்பது மிகவும் அரிது. அவரின் நடிப்பும் இப்படத்தில் நன்றாக வந்திருக்கிறது. மேலும் சாய் அபயங்கர் இப்படத்தில் இசையமைத்திருக்கிறார், அவருக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி.

இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் , பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை கொடுங்க” என்று நடிகர் ஷேன் நிகம், அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சாந்தனு பாக்யராஜ் வெளியிட்ட பல்டி படம் தொடர்பான பதிவு :

நடிகர் ஷேன் நிகம் மற்றும் சாந்தனு பாக்யராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பல்டி. இந்த படத்தை மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் செல்வராகவன் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது கபடி கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. மேலும் இந்த படமானது தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வரும் 2025 செப்டம்பர் 26ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.