Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kantara Chapter 1: ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு இதோ!

Kantara Chapter 1 Update: கடந்த 2022ம் ஆண்டு பான் இந்திய மொழிகளில் வெளியாகி மக்களிடையே பிரபலமான படம் காந்தாரா. இப்படத்தின் பாகம் 2, காந்தாரா சாப்டர் 1 என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. தற்போது இந்த படத்திலிருந்து சூப்பர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அது என்ன என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Kantara Chapter 1: ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது? படக்குழு வெளியிட்ட அறிவிப்பு இதோ!
காந்தாரா சாப்டர் 1 படம் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 19 Sep 2025 14:51 PM IST

கன்னட மொழியில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்ற திரைப்படம் காந்தாரா (Kantara). இந்த படத்தில் பிரபல நடிகரான ரிஷப் ஷெட்டி (Rishabh Shetty) கதாநாயகனாக நடித்து அசத்தியிரு ந்தார். இந்த காந்தாரா படத்தில் அவர் நடித்தது மட்டுமில்லாமல் அவர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த காந்தாரா படமானது கர்நாடக மக்களின் தெய்வமான பஞ்சுரலியின் கதையை அடிப்படையாக கொண்டு வெளியாகியிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து, காந்தாரா சாப்டர் 1ன் (Kantara Chapter 1) என்ற திரைப்படமானது உருவாகியுள்ளது. இந்த படத்தை நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி மற்றும் நடித்துள்ளார். இந்த படமானது தனுஷின் இட்லி கடை படத்துடன், 2025 அக்டோபர் 2ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், படக்குழு தற்போது புது அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், இந்த காந்தாரா சாப்டர் 1 படமானது “ஐமேக்ஸ்” (IMAX) திரையில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது என்பது பற்றிய அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : வின்டேஜ் கதையில் கார்த்தி.. விறுவிறுப்பாக உருவாகும் மார்ஷல்! 

காந்தாரா படக்குழு வெளியிட்ட நியூ அப்டேட் பதிவு :

காந்தாரா சாப்டர் 1ன் ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது?

நடிகர் ரிஷப் ஷெட்டியின் காந்தாரா சாப்டர் 1 படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டியுடன், ருக்மிணி வசந்த், ஜெயராமன், மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது காந்தாரா 1 படத்தின் முன் நடந்த கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகை ருக்மிணி வசந்த், “கனகவதி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க : லோகாவில் நஸ்லென் போன்று நானும் நடிக்கிறேன்.. ஆனால் – நடிகர் கவின் பகிர்ந்த விஷயம்!

இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 2 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்த படத்தின் டிரெய்லர் வரும் 2025, செப்டம்பர் 22ம் தேதியில் மதியம் 12:45 மணியளவில்  வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

காந்தாரா படத்தின் பட்ஜெட்

காந்தாரா 1 படமானது சுமார் ரூ 14 கோடி பட்ஜெட்டில் வெளியாகி சுமார் ரூ 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் படமாக அமைந்திருந்தது. இந்த படத்தின் பாடல்களும் ஒவ்வொன்றும் மக்களிடையே ஹிட்டடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து காந்தாரா சாப்டர் 1 படமானது சுமார் ரூ 125 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் ஷூட்டிங்கின் போது பல விபத்துகள் மற்றும் மரணங்கள் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பல்வேறு தடைகளை கடந்தும் இப்படமானது சொன்ன தேதியில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.