Marshal: வின்டேஜ் கதையில் கார்த்தி.. விறுவிறுப்பாக உருவாகும் மார்ஷல்!
Marshal Movie Shooting Update: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கார்த்தி. இவரின் முன்னணி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம்தான் மார்ஷல். இயக்குநர் தமிழ் இயக்கும் இப்படத்தின் ஷூட்டிங், தற்போது ராமேஸ்வரத்தில் தொடங்கியுள்ளதாம். இது குறித்தான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் கார்த்தியின் நடிப்பில் சர்தார் 2 (Sardar2) மற்றும் வா வாத்தியார் (Vaa Vaathiyaar) போன்ற படங்கள் தயாராகியிருக்கும் நிலையில், விரைவில் வெளியாகவும் உள்ளது. இந்த படங்களைத் தொடர்ந்து கார்த்தி புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். டாணாக்காரன் (Taanakkaran) என்ற படத்தின் மூலம் பிரபலமானவர்தான் இயக்குநரும், நடிகருமான தமிழ் (Tamizh). இவரின் இயக்கத்தில்தான் நடிகர் கார்த்தி “மார்ஷல்” (Marshal) என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படமானது ஆரம்பத்தில் கார்த்தி29 என அறிவிக்கப்பட்ட நிலையில், அதை தொடர்ந்து கடந்த 2025 ஜூலை மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியது.
இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்ற நிலையில் தொடர்ந்து, தற்போது ராமேஸ்வரத்தில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மார்ஷல் பட ஷூட்டிங் ராமேஸ்வரத்தில் கிட்டத்தட்ட 30 நாட்களுக்கும் மேல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஷூட்டிங் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : என்னோட முதல் ரிஜெக்ஷன் அதுதான்.. உண்மையை உடைத்த சிம்ரன்!
இணையத்தில் வைரலாகும் கார்த்தியின் மார்ஷல் பட ஷூட்டிங் தள புகைப்படம் :
#Marshal — First Schedule Started Yesterday & It’s 30 Days Shoot🔥#Karthi & #KalyaniPriyadarshan Part Of Shoot in Rameshwaram Live Location!! pic.twitter.com/mTuiwz6NrP
— Saloon Kada Shanmugam (@saloon_kada) September 18, 2025
மார்ஷல் படத்தின் அப்டேட் :
நடிகர் கார்த்தியின் இந்த மார்ஷல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். இவர் தமிழில் மாநாடு மற்றும் ஹீரோ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் வெளியான லோகா என்ற படத்தின் யக்ஷி வேடத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இதையும் படிங்க : லோகாவில் நஸ்லென் போன்று நானும் நடிக்கிறேன்.. ஆனால் – நடிகர் கவின் பகிர்ந்த விஷயம்!
இந்த மார்ஷல் படமானது வின்டேஜ் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இப்படமானது கடற்கரை மக்கள் மற்றும் கடத்தல் சார்ந்த கதைக்களத்துடன் உருவாக வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. மேலும் இந்த படமானது சுமார் 2 பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மார்ஷல் படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர் :
கார்த்தியின் இந்த மார்ஷல் படத்தில் அவருடன், கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், லால்,பிரபு, முரளி ஷர்மா, ஜான் கொக்கின் மற்றும் ஈஸ்வரி ராவ் போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். கார்த்தி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், நெகடிவ் வேடத்தில் நடிகர் வடிவேலு நடிக்கவுள்ளதாக கூப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.