டாக்டர் முதல் மதராஸி வரை… சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 வசூலித்த படங்களின் லிஸ்ட் இதோ!
Actor Sivakarthikeyan: தமிழ் சினிமவில்முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. இந்தப் படம் தற்போது ரூபாய் 100 கோடிகள் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அவரது நடிப்பில் இதுவரை 100 கோடி ரூபாய் வசூலித்த படங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் (Actor Sivakarthikeyan). சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் வந்து தற்போது கொடிக்கட்டிப் பறந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த 05-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. ரொமாண்டிக் ஆக்ஷன் பாணியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் வெளியாகி தற்போது 13 நாட்களைக் கடந்துள்ள நிலையில் உலக அளவில் 100 வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூரவமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வசூலில் 100 கோடி ரூபாய் வசூலித்த படங்கள் என்ன என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி நடிகர் சிவகர்த்திகேயன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான டாக்டர் படம், 2022-ம் ஆண்டு வெளியான டான், 2024-ம் ஆண்டு வெளியான அமரன் ஆகிய படங்கள் சிவகார்த்திகேயன் நடிப்பில் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. தற்போது இந்த வரிசையில் மதராஸி படமும் இணைந்துள்ளது என்று சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.




மதராஸி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Madharaasi is a RAMPAGE at the box office 🔥🔥
Collects a gross of 100 CRORES WORLDWIDE ❤🔥❤🔥
Book your tickets now!
🎟️ https://t.co/DiYIeLdzAt#MadharaasiMadness #Madharaasi#BlockbusterMadharaasi pic.twitter.com/s0ebpKgtRT— Sri Lakshmi Movies (@SriLakshmiMovie) September 18, 2025
Also Read… நடிகர் விஜயின் மியூசிக் டேஸ்ட் நல்லா இருக்கும் – விஜய் ஆண்டனி சொன்ன விசயம்
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படம் வருகின்ற ஜனவரி மாதம் 14-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படம் நடிகர் விஜயின் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படத்துடன் போட்டிப் போட உள்ளது குறிப்பிடத்தக்கது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… உங்கள எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே… வெளியானது குஷி படத்தின் ரீ ரிலீஸ் ட்ரெய்லர்