AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திருச்சி வருகை..2 நாள்கள் விசிட்…பாஜக போட்டியிடும் தொகுதிகள் தேர்வு?

Union Home Minister Amit Shah: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள்கள் தேர்தல் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகை தர உள்ளார். இந்த வருகையின் போது, பாஜக போட்டியிடும் தொகுதிகள் தொடர்பாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதா தகவல் வெளியாகியுள்ளது.

உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திருச்சி வருகை..2 நாள்கள் விசிட்…பாஜக போட்டியிடும் தொகுதிகள் தேர்வு?
உள்துறை அமைச்சர் இன்று திருச்சி வருகை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 13 Feb 2026 06:29 AM IST

தமிழகத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் வெற்றியை சாதகமாக்கி ஆட்சி அமைக்கும் முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததுடன் தேர்தல் வியூகம் அமைத்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட 3 பேர் குழுவை பாஜக தலைமை அமைத்திருந்தது. இவர்கள் தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாகவும், கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திறம்பட கையாண்டு வருகின்றனர். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை ( பிப்ரவரி 13) திருச்சிக்கு வருகை தர உள்ளார். அதன்படி, அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைகிறார். அங்கிருந்து, நட்சத்திர விடுதிக்கு சென்று அங்கு இரவு தங்கி ஓய்வு எடுக்கிறார்.

காரைக்காலில் பொதுக்கூட்டம்

பின்னர், மறுநாள் சனிக்கிழமை ( பிப்ரவரி 14) திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பிராந்தியத்திற்கு செல்கிறார். அங்கு, காரைக்கால் வரிச்சிகுடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டர் தரையிறங்குகிறது. அங்கிருந்து, கார் மூலம் காரைக்கால் நகராட்சி தேர்தலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார். இந்த பொதுக்கூட்டம் முடிந்த பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் திருச்சி விமான நிலையம் வந்து, விமான மூலம் சேலத்துக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு, நடைபெறும் பாஜக மத்திய குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசுகிறார்.

மேலும் படிக்க: 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து நாட்டு கல்வெட்டில் தமிழ் வணிகர் பெயர் – வியந்துபோன ஆய்வாளர்கள்

பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்து முக்கிய ஆலோசனை

இதனிடையே, திருச்சியில் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் கேட்க கூடிய பாஜக போட்டியிடும் தொகுதிகளின் விவரங்கள் ஆகியவற்றை தமிழக பாஜக நிர்வாகிகள் அமித் ஷாவிடம் அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள்

இதனுடன், ஏற்கெனவே தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ள கட்சிகள் குறித்து உளவுத்துறை தயார் செய்துள்ள பட்டியலை ஒப்பிட்டு பார்த்து அதில், பாஜகவுக்கு உறுதியாக வெற்றி வாய்ப்பை தரும் சட்டமன்ற தொகுதிகளை தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாஜகவுக்கான இந்த தொகுதிகளை அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையின் போது, பாஜக கேட்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: கோவை ஈஷாவில் மகாசிவராத்திரி விழா – சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Follow Us