Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2000 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து நாட்டு கல்வெட்டில் தமிழ் வணிகர் பெயர் – வியந்துபோன ஆய்வாளர்கள்

Ancient Tamil Discovery : எகிப்து நாட்டில் 2000 ஆம் ஆண்டுகளுக்கு முந்தைய பேரரசர்களின் 0கல்லறையில் தமிழ் வணிகர் பெயர் இடம்பெற்றுள்ளது. அதுவும் தமிழில் இடம் பெற்றுள்ள நிலையில் தமிழர்களின் கடல் வணிகத்தை எண்ணி ஆய்வாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

2000 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து நாட்டு கல்வெட்டில் தமிழ் வணிகர் பெயர் –  வியந்துபோன ஆய்வாளர்கள்
எகிப்து நாட்டு கல்வெட்டி தமிழ் வணிகர் பெயர்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Feb 2026 21:25 PM IST

எகிப்து நாட்டில் உள்ள பேரரசர் கல்லறைகளில் கிட்டத்தட்ட 2000 ஆம் ஆண்டுகள் பழமையான தமிழ் – பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தமிழர்கள் பண்டையா காலத்திலேயே உலக நாடுகளுடன் வர்த்தக தொடர்பு கொண்டிருந்ததற்கான முக்கிய சான்றாக பார்க்கப்படுகிறது. பிரான்ஸ் (France) நாட்டில் உள்ள பாரிஸ் நகரில் பிரெஞ்ச் ஏசியன் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த பேராசிரியர் சார்லட் ஸ்மித் மற்றும் லோசான் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்டிராக் ஆகியோர் கடந்த 2024 முதல் 2025 ஆம் ஆண்டுகளில் எகிப்தின் வேலி ஆஃப் தி கிங்ஸ் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இது எகிப்து நாட்டின் மன்னர்களின் கல்லறைகள் கொண்ட இடம். இந்த நிலையில் அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் 6 கல்லறைகளில் இருந்து சுமார் 30 கல்வெட்டுகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் தமிழ் – பிராமி எழுத்துகள் இருப்பது கண்டறியப்பட்டது.

எகிப்து பேரரசர் கல்லறைகளில் தமிழ் வணிகர் பெயர்

இந்த கல்வெட்டுகள் கிபி 1 ஆம் நூற்றாண்டு முதல் 3 ஆம் ஆண்டு நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தை சேர்ந்தவை என மதிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2000 ஆம் ஆண்டுகள் பழமையானவை. கல்வெட்டுகளில் சிகை கொற்றான் என்ற தமிழ் வணிகரின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவரின் பெயர் 5 வெவ்வேறு பிரமிட்களில் மொத்தம் 9 முறை பொறிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கல்வெட்டில் சிகை கொற்றான் வர கண்ட என்று பொறிக்கப்பட்டுள்ளது. அதற்கு சிகை கொற்றான் இங்கு வந்து பார்த்தான் என்று பொருள் கூறப்படுகிறது.

இதையும் படிக்க : புதுச்சேரி சட்டமன்ற கூட்டம்…ரூ.5,396 ஆயிரம் கோடிக்கு இடைக்கால பட்ஜெட்…முதல்வர் தாக்கல் செய்தார்!

அமைச்சர் தங்கம் தென்னரசுவின் எக்ஸ் பதிவு

 

முன்னதாக எகிப்து நாட்டின் துறைமுக நகரமான பெரேனிக்கே பகுதியில் தமிழர்கள் வர்த்தகம் செய்ததற்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நைல் நதி பகுதிகளிலும் தமிழர்கள் தங்கள் தடத்தை பதித்திருப்பது உறுதியாகியுள்ள நிலையில் வர்த்தகத்தைத் தாண்டி கலாச்சார தொடர்பும் இருந்திருக்கலாம் என்ற புதிய பார்வையை உருவாக்கியுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் இந்திய கடல் வாணிபத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிக்க : விஜயநகர காலத்து பொக்கிஷம் பறிமுதல்…4 பேரை தட்டி தூக்கிய போலீசார்…சிலை கடத்தல் பிரிவு அதிரடி நடவடிக்கை!

இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் பக்கத்தில், கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்தக் கண்டுபிடிப்புத் திகழ்கிறது. ரோமானிய காலத்திலேயே கடல் கடந்து எகிப்து சென்று, இன்று நாம் பேசும் உலகமயமாக்கலை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய முன்னேற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு இவை மற்றுமொரு சாட்சி. “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்பதோடு “உலகம் தழுவிய தமிழ்” என்பதே நம் அடையாளம் என்ற பெருமையை இந்த வரலாறு நம்மை நிமிரச் செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.