நெப்போளியன் வைர நகைகள் கொள்ளை விவகாரம்.. இரண்டு பேர் அதிரடி கைது.. வெளியான பரபரப்பு தகவல்கள்!
Two Arrested in Napoleon Diamond Jewelry Theft | பிரான்ஸ் நாட்டின் லவ்ரி அருங்காட்சியகத்தில் காட்சி படுத்தப்பட்டு வந்த மன்னர் நெப்போளியனின் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக தற்போது இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாரிஸ், அக்டோபர் 27 : பிரான்ஸ் மன்னர் நெப்போளியனின் (France King Nepoleon) விலை உயர்ந்த வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் காட்சி படுத்தப்பட்டு வந்த நெப்போளியனின் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.
லவ்ரி அருங்காட்சியத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நெப்போளியன் நகைகள்
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள லவ்ரி அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் மன்னர் நெப்போளியனின் வைர நகைகள் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்த நகைகளை காண பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அவ்வாறு ஏராளமான பொதுமக்கள் நெப்போளியனின் நகைகளை பார்வையிட்டு வந்த நிலையில், அக்டோபர் 19, 2025 அன்று அந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மிகுந்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டு வந்த அந்த வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : 24 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 74 வயது முதியவர்.. காத்திருந்த ட்விஸ்ட்!




இரண்டு பேரை கைது செய்த போலீஸ்
மன்னர் நெப்போளியனின் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளனர். நகைகளை திருடியது அவர்கள் இருவர் தான் என்பதை இதுவரை உறுதி செய்யாத நிலையில், அந்த நபர்கள் தொடர்பான விவரங்களை போலீசார் வெளியிடாமல் உள்ளனர். அவர்கள் இருவரும் விமானம் மூலம் தப்பிச் செல்ல முயற்சி செய்த நிலையில், அவர்களை கைது செய்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : ‘என்ன காப்பாத்துங்க’.. சவுதியில் சிக்கித் தவிக்கும் இந்திய இளைஞர்!
நான்கு பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் – போலீஸ்
நெப்போளியன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில், கொள்ளையர்கள் தொழில்நுட்பத்தை திறம்பட கையாள தெரிந்தவர்களாகவும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நன்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என போலீசார் கூறியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தில் நான்கு பேர் ஈடுபட்டு இருக்க வேண்டும் என கூறும் போலீஸ், மேலும் இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகிறது. தற்போது இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் 30 வயது நபர்கள் என்பதை காவல்துறை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.