AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் நகரம்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உறுதி!

Elon Musk Predicts City In Moon In Next 10 Years | நிலவு தொடர்பாக உலக நாடுகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நிலவு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் நிலவில் நகரம்.. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உறுதி!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Feb 2026 16:26 PM IST

வாஷிங்டன், பிப்ரவரி 09 : நிலவு குறித்து உலக நாடுகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரு  நிலையில், நிலவில் நகரம் அமைப்பது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனர் எலான் மஸ்க் (Elon Musk) மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளார். செவ்வாய் கிரகத்தை விட நிலவில் நகரம் உருவாக்குவது வேகமாகவும், நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நிலவில் நகரம் அமைப்பது குறித்து எலான் மஸ்க் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிலவில் நகரம் அமைப்பது குறித்து பேசிய எலான் மஸ்க்

நிலவு குறித்து இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல்வேறு தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் உலக பணக்காரர் எலான் மஸ்க் தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், நிலவில் நகரம் அமைப்பது குறித்து எலான் மஸ்க் பேசியுள்ளார்.

இதையும் படிங்க : இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் அமல்: 25% கூடுதல் சுங்கவரி ரத்து.. முக்கிய அம்சங்கள் என்ன?

நிலவில் ஒரு நகரத்தை உருவாக்குவது சாத்தியமானது – எலான் மஸ்க்

இது குறித்து கூறியுள்ள எலான் மஸ்க், செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்பை உருவாக்கும் இலக்குடன் செயல்பட்டு வந்தாலும், அதற்கு முன்னதாக நிலவில் ஒரு நகரத்தை உருவாக்குவது சாத்தியமானது. செவ்வாயை விட நிலவு பூமிக்கு மிகவும் அருகில் இருப்பதால், அங்கு அடிக்கடி விண்கலங்களை அனுப்ப முடியும்.

நிலவிற்கு செல்ல வெறும் 2 நாட்கள் மட்டுமே ஆகும். ஆனால், செவ்வாய் கிரகத்தை அடைய சுமார் 6 மாதங்கள் தேவைப்படுகிறது. இந்த நேர வித்தியாசம், செலவு மற்றும் தொழில்நுட்ப சவால்களை கணிசமாக குறைக்கிறது. ஆனால், தொழில்நுட்ப ரீதியாக நிலவில் நகரம் உருவாக்குவது எளிதாகும். எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள் நிலவில் ஒரு செயல்படும் நகரத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறியுள்ளார்.

Follow Us