மனிதனுக்கு பன்றியின் கல்லீரல்: மருத்துவ உலகில் புதிய சாதனை!
Pig liver transplant to human: உறுப்பு மாற்று சிகிச்சையின் புதிய மைல்கல் ஆக பன்றியின் கல்லீரலை மனிதனுக்கு வெற்றிகரமாக பொருத்தி சீன மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இது உலகெங்கும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை்கு ஏற்பட்டிருந்த பின்னடைவை சரி செய்ய உதவும் பெரும் மாற்றமாகவே பார்க்கப்படுகிறது. ஆம், மனித உடல் உறுப்புகளுக்கு பதிவு செய்து காத்திருப்பவர்கள் ஏராளம். அப்படி, காத்திருக்கும் அனைத்து மனித உயிர்களுக்கும் இந்தச்செய்தி புதிய நம்பிக்கையை அளித்துள்ளது என்றே கூறலாம்.
உலகி்லேயே முதல்முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் கல்லீரல் வெற்றிகரமாக மனிதருக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, பல்வேறு நாடுகளிலும் பன்றியின் உடல் உறுப்புகளை மனிதனுக்கு பொருத்தி வல்லுநர்கள் பல கட்டங்களாக சோதித்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது சீனாவில் 71 வயது முதியவருக்கு பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் ஒரு புதிய மைல்கல் ஆகவே பார்க்கப்படுகிறது. பன்றியின் உறுப்புகளை மனிதர்களுக்கு பயன்படுத்துவது என்பது புதிதான விஷயம் இல்லையென்றாலும், கல்லீரல் பொருத்தப்பட்டு, அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது இதுவே முதல்முறையாகும். மற்ற விலங்குகளை விட பன்றியின் உறுப்புகள் மனிதர்களின் உறுப்புகள் மாதிரியே இருப்பதால், உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பொருத்தமானவையாக அவை தேர்வு செய்யப்படுகின்றன. இது பன்றியின் உறுப்புகள் எதிர்காலத்தில் மனித உறுப்புகளுக்கான பாதுகாப்பான மாற்று வழி ஆக இருக்கலாம் என்பதற்கான முக்கிய சான்றாகும்.
Also read: அமெரிக்காவில் பணியாற்றும் இந்தியர்களுக்கு இனிப்பான செய்தி..
வெற்றிகரமாக அறுவை சிகிச்சை:
சீனாவின் அன்ஹூய் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த முதியவருக்கு கல்லீரல் புற்றுநோய் பாதிப்புடன், கல்லீரல் கடினமாகும் (Cirrhosis) பாதிப்பும் இருந்துள்ளது. இதன் காரணமாக அவரது உடல் மனித கல்லீரல் மாற்றத்திற்கான தகுதியையும் இழந்திருந்தது. இப்படி சிக்கலான நிலையில் இருந்த அந்த முதியவரின் உயிரை காப்பாற்ற எடுத்த முடிவே இந்த மரபனு மாற்றப்பட்ட பன்றியின் உறுப்பு மாற்றும் சிகிச்சை. தொடர்ந்து, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு 2024 கடந்த மே 17ஆம் தேதி அவருக்கு வெற்றிகரமாக 11 மாத பன்றியின் கல்லீரல் பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை முடிக்கப்பட்டுள்ளது. இந்த அறுவை சிகிச்சை முடிந்த 31 நாள்களுக்கு புதிதாக பொருத்தப்பட்ட அந்த பன்றியின் கல்லீரல் அவரது உடலுடன் பொருந்தி நன்கு செயல்பட்டு வந்துள்ளது.




மருத்துவர்கள் கூறுவது என்ன?
இந்த சிகிச்சை பற்றி மருத்துவர்கள் கூறும்போது, அந்த முதியவரின் கல்லீரல் முழுமையாக அகற்றப்படாமல் புற்றுநோய் கட்டி இருந்த பகுதியை மட்டும் அகற்றப்பட்டதாகவும், மீதமுள்ள பகுதியில் பன்றியின் கல்லீரலை இணைத்ததாகவும் தெரிவித்தனர். இந்த இணைப்பின் உதவியுடன் அந்த முதியவரின் கல்லீரல் நன்கு செயல்பட்டு வந்த நிலையில், 38 நாள்களுக்கு பின்னர் பின்றியின் கல்லீரல் அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த அறுவை சிகிச்சையால் நீண்ட காலத்திற்கு உயிர் வாழ முடியும் என்பது நிரூபிக்கப்படவில்லை. எனினும், அந்த முதியவர் 171 நாள்களுக்கு பிறகு இரைப்பை குடல் ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்துள்ளார்.
Also read: 2026-ல் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்.. பதற வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு!
மற்ற அறுவை சிகிச்சை போல், கல்லீரல் மாற்றம் என்பது சாதாரணமான விஷயம் அல்ல என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில், மனித உடலில் முக்கியமான பல்வேறு செயல்பாடுகளை கொண்ட கல்லீரலின் வேலைகளை மாற்று கல்லீரல் செய்வது என்பதும் சாதாரணம் கிடையாது என்கின்றனர். அதன் காரணமாக இது உலகளவில் கல்லீரல் தானம் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில், ஒரு புதிய வழியை காட்டுகிறது. வரும் காலங்களில் பன்றி கல்லீரல்கள் மனிதர்களுக்கு தற்காலிகமாக வேலை செய்யும் வகையில் பயன்படுத்தப்படலாம்.