2026-ல் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்.. பதற வைக்கும் பாபா வங்காவின் கணிப்பு!
Baba Vanga Prediction For 2026 | பாபா வங்காவின் கணிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகி பேசுபொருளாக மாறும். அந்த வகையில், 2026 ஆம் ஆண்டு மிகப்பெரிய பொருளாதார சிக்கல் ஏற்பட உள்ளதாக பாபா வங்காவின் கணிப்பு வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு மிகவும் கடினமான ஆண்டாக அமைந்தது. காரணம், 2025-ல் உலகின் பல்வேறு பகுதிகளில் போர் நிலவியது. இஸ்ரேல் – ஹமாஸ், இந்தியா – பாகிஸ்தான், பாகிஸ்தான் – அப்கானிஸ்தான், ரஷ்யா – உக்ரைன் என உலகின் எந்த பக்கம் திரும்பினாலும் போர் சூழல் நிலவியது. போர் மட்டுமன்றி, உலகின் பல்வேறு பகுதிகளை நிலநடுக்கம், மழை வெள்ளம், அதீத வெப்பம் என இயற்கை சிக்கல்கள் கடுமையாக வாட்டி வதைத்தது. 2025-ல் பொதுமக்கள் இத்தகைய கடுமையான சிக்கல்களை சந்தித்த நிலையில், 2026 ஆம் ஆண்டு வரக்கூடிய மிகப்பெரிய பிரச்னை குறித்த பாபா வங்காவின் கணிப்பு வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2026-ல் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் ஏற்படும்
பல்கேரியாவை சேர்ந்தவர் பாபா வங்கா. தீர்கதரிசி என நம்பப்படும் இவர் 1996 ஆம் ஆண்டு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இருப்பினும் அவர் எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே கணித்து வைத்துள்ளார் என கூறப்படுகிறது. அதற்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் பாபா வங்காவின் கணிப்புகள் வெளியாகி வருகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அவரின் கணிப்புகள் சில உண்மையாக நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக பாபா வங்காவை ஏராளமான மக்கள் நம்ப தொடங்கிவிட்டனர்.
இதையும் படிங்க : அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு – 4 மாணவர்கள் பரிதாப பலி… 12 பேர் படுகாயம்




அச்சுறுத்தும் பாபா வங்காவின் 2026 ஆம் ஆண்டு கணிப்புகள்
பாபா வங்கா இதற்கு முன்னதாக ஒருசில போர்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளை துல்லியமாக கணித்துள்ளார். இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்பு வெளியாகியுள்ளது. அதில் 2026-ல் உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார சிக்கல் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு பாபா வங்கா தனது புத்தகத்தில் Cash Crush என பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பணம், டிஜிட்டல் பணம் என ஒட்டுமொத்த பொருளாதாரமும் மிக கடுமையான சிக்கலை சந்திக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ஆசிரியையின் வீட்டில் தங்கி கொடூர செயலில் ஈடுபட்ட மாணவர்கள் கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்!
ஏற்கனவே உலக அளவில் பணவீக்கம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட சிக்கல்களை உலக நாடுகள் எதிர்க்கொண்டு வரும் நிலையில், பாபா வங்காவின் இந்த கணிப்புகள் மேலும் அச்சுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையாகிவிடுமோ என்ற கேள்விகளும், குழப்பங்களும் எழ தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.