அமெரிக்க பள்ளியில் துப்பாக்கி சூடு – 4 மாணவர்கள் பரிதாப பலி… 12 பேர் படுகாயம்
Mississippi School Shooting : அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பியில் ஒரு பள்ளியில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் (America) மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் அக்டோபர் 11, 2025 அன்று கால்பந்து போட்டி முடிந்த சில நிமிடங்களிலேயே துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த தாக்குதலில் நான்கு மாணவர்கள் உயிரிழந்த நிலையில் 12 பேர் படுகாயமடைந்தாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கியது. மிசிசிப்பி மாநிலத்தில் உள்ள லீலாண்ட் என்ற ஊரில் அக்டோபர் 11, 2025 நள்ளிரவில் பள்ளியின் சார்பாக ஹோம் கம்மிங் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இது அமெரிக்க பள்ளிகளில் முன்னாள் மாணவர்களை வரவேற்கும் பாரம்பரிய விழாவாகும். இந்த கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது பள்ளியின் பிரதான சாலையில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. இதனால் மாணவர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடினர்.
4 மாணவர்கள் மரணம்
மாணவர்கள் ஹோம் கம்மிங் நிகழ்ச்சியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் திடீரென பலத்த துப்பாக்கி சத்தங்கள் கேட்டிருக்கிறது. இதனையடுத்து மாணவர்கள் பயத்தில் அங்கிருந்து ஓடினர். இந்த நிலையில் மாணவர்களை நோக்கி மர்ம நபர்கள் சுட்டதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை உடனடியாக காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 4 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் அருகிலுள்ள பெரிய மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிக்க : அசைவ உணவு சாப்பிட்டவர் பலி.. நடுவானில் விமானத்தில் ஷாக் சம்பவம்… நடந்தது என்ன?




இந்த நிலையில் லீலாண்ட நகர மேயர் ஜான் லீ இது குறித்து தெரிவித்ததாவது, இந்த துப்பாக்கி சூடு எங்கள் நகரின் பிரதான சாலையில் நடந்தது. அங்கு வெள்ளிக்கிழமை இரவு மக்கள் மிகுந்த திரளாக இருந்தனர். இது மிகுந்த துயரமான ஒரு சம்பவம் என்றார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை
18 வயது இளைஞரை தேடும் போலீசார்
இந்த நிலையில் அசோசியேட் பிரஸ் வெளியிட்ட தகவலின் படி, காவல்துறையினர் தற்போது சந்தேகத்தின் பெயரில் 18 வயது இளைஞரை தேடி வருகின்றனர். அந்த இளைஞர் குறித்து மிசிசிப்பி மாநிலத்தின் ஜாஸ்பர் கவுண்டி ஷெரிஃப் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. துப்பாக்கி பள்ளி வளாகத்தில் நடைபெற்றிருக்கிறது எவும் அங்கு ஹைடெல்பெர்க் ஆயிலர்ஸ் அணியின் ஹோம் கம்மிங் கால்பந்து போட்டி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : 3 வயது குழந்தையை திட்டமிட்டு பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோர்.. லண்டனில் இந்திய வம்சாவளி பெற்றோர் கொடூர செயல்!
மிசிசிப்பி மாகாணத்தின் சிறிய நகரமான லீலாண்ட் மிகவும் அமைதியான பகுதியாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அங்கு துப்பாக்கி சூடு நடத்தப்படிருப்பது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சம்பவம் மிகுந்த வேதனையை அளிப்பதாக அப்பகுதி மக்கள் தங்கள் வேதனையை பதிவு செய்துள்ளனர்.