டிரம்ப்பிற்கு இல்லை… அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு.. யார் இந்த மரியா கொரினா?
Nobel Peace Prize 2025 : 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவில் ஜனநாயக உரிமைக்காக போராடிய மரியா கொரினா மச்சோடாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு தான் நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் கூறி வந்தார்.

அமெரிக்கா, அக்டோபர் 10 : 2025ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவில் ஜனநாயக உரிமைக்காக போராடிய மரியா கொரினா மச்சோடாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு போர்களை நிறுத்தியதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கூறி வந்தார். இந்த நிலையில், அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுககு நோபர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. 1901ஆம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.




அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 2025 அக்டோபர் 10ஆம் தேதியான இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போது அமைதிக்கான நோபல் பரிசு மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதுவும் இந்தாண்டு (2025) அமைதிக்கான நோபல் பரிசு எதிர்பார்ப்புகள் வழக்கத்தை விட அதிகரித்தன. ஏனென்றால் அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு தான் வழங்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வந்தார்.
Also Read: அமைதிக்கான நோபல் பரிசு.. அதிபர் டிரம்ப் தான் தகுதியானவர் – பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்..
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
Nobel Peace Prize 2025 goes to Maria Corina Machado for her tireless work promoting democratic rights for the people of Venezuela and for her struggle to achieve a just and peaceful transition from dictatorship to democracy. pic.twitter.com/pzaqExiLkC
— ANI (@ANI) October 10, 2025
அமைதிக்கான நோபல் பரிசு குறித்து டிரம்ப் பெயரை எட்டு நாடுகள் பரிந்துரைத்தன. இவற்றில் அமெரிக்கா, ஆர்மீனியா, அஜர்பைஜான், மால்டா மற்றும் கம்போடியா ஆகியவை டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பரிந்துரைத்தன. இன்று கூட நோபல் பரிசு குறித்து டிரம்ப் பேசியிருந்தார். எட்டு போர்களை நிறுத்தியதாகவும் தனது சாதனைகளை அவர் சுட்டிக் காட்டினார். அதோடு, எதுவும் செய்யாத ஓபாவுக்கு நோபல் பரிசு கொடுத்தனர் என்றும் அவர் விமர்சித்தார்.
Also Read : சொந்த மக்களையே குண்டுவீசித் தாக்கும் நாடு பாகிஸ்தான் – ஐ.நாவில் இந்தியா பகீர் குற்றச்சாட்டு..
அந்த வகையில், 2025ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவைச் சேர்ந்த மரியாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவில் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்தியதற்காக மரியா கொரினாவுக்கு விருது அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசை அறிவித்து, குழு, “நாங்கள் எப்போதும் அடக்குமுறைக்கு எதிராக எழுந்து நின்று சுதந்திரத்திற்கான நம்பிக்கையை வெளிப்படுத்திய துணிச்சலான நபர்களை கௌரவித்து வருகிறோம்” என்று கூறியது.