முடங்கிய அமெரிக்க அரசு நிர்வாகம்.. செலவினங்களுக்கு சிக்கல்.. காரணம் என்ன?
US Government Shutdown | அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் அரசு புதிய மசோதாவை அறிமுகம் செய்ய கொண்டு வந்தது. ஆனால், அந்த மசோதாவுக்கு ஜனநாயக கட்சி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அது இயற்றப்படாமல் உள்ளது. இதன் விலைவாக ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அமெரிக்க அரசு நிர்வாகம் தற்போது முடங்கியுள்ளது.

அமெரிக்கா, அக்டோபர் 01 : அமெரிக்காவில் அரசு நிர்வாகம் (America Government Administration) முடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா ஒன்றை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இந்த முடக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நிறைவேற்றப்படாமல் சிக்கலில் உள்ள அந்த மசோதா என்ன, அதற்கு அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதற்கும் என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்காவில் அரசு நிர்வாகம் முடங்கியது
அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தலைமையிலான குடியரசு கட்சியின் (Democratic Party) ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிரம்ப் அரசு அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒரு புதிய மசோதாவை கொண்டு வந்தது. அந்த மசோதாவில் பழைய திட்டங்களை விடுத்து புதிய திட்டங்களுக்கு நிதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த மசோதாவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி (Republic Party) மறுப்பு தெரிவித்து விட்டது. மசோதாவை நிறைவேற்ற 60% வாக்கு தேவைப்படும் பட்சத்தில் மசோதாவுக்கு ஆதரவாக 55 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இதே போல மசுதாவுக்கு எதிர்ப்பாக 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதையும் படிங்க : அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருத்துகளுக்கு 100% வரி – அதிபர் டிரம்ப் அடுத்த அதிரடி..




நிறைவேற்றப்படாமல் உள்ள புதிய மசோதா
இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ள இந்த புதிய மசோதாவை இயற்ற இன்னும் எட்டு பேர் வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழலை பயன்படுத்திக் கொண்டு ஜனநாயக கட்சி சில நிபந்தனைகளை அமெரிக்க அரசுக்கு விதித்துள்ளது. அதாவது டிரம்பின் சுகாதார திட்டங்கள் தொடர்பான மருத்துவ காப்பீட்டு சலுகைகளை நீட்டிக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது. ஜனநாயக கட்சியின் இந்த வலியுறுத்தலை டிரம்ப் கேட்காததால் புதிய மசோதா நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைகப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : H1B Visa : எச்1பி விசாவி கட்டண உயர்வு.. மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா முடிவு?
அரசு செலவினங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது
மசோதா நிறைவேற்றப்படாததன் காரணமாக அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விமான போக்குவரத்து முதல் சிறு வணிக கடன் அலுவலகங்கள் வரை என அனைத்தும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. மசோதாவுக்கு, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி ஆதரவளிக்காததால் அரசு செலவினங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது