30 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர்.. பழி வாங்கிய இந்திய இளைஞர்!
US Man Killed By an Indian Man in America | அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூயார்க், செப்டம்பர் 27 : அமெரிக்காவில் (America) இந்திய இளைஞர் ஒருவர் 71 வயது முதியவரை கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பான போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்திய இளைஞர் அமெரிக்க முதியவரை கொலை செய்தது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அமெரிக்க முதியவரை கொலை செய்த இந்திய இளைஞர்
அமெரிக்காவின் கலிபோர்னியா (California) மாகாணத்தில் பிரம்மர் எனும் நபர் வசித்து வருகிறார். இவர் 1995 ஆம் ஆண்டு ஒரு குழந்தையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறை தண்டனையும் அனுபவித்துள்ளார். அதற்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தாலும், அவரது பெயர் சரித்திர குற்றவாளிகள் பதிவேட்டில் இருந்து வந்துள்ளது. போலீசார் அது தொடர்பாக அவரை கண்காணித்துக்கொண்டே இருந்துள்ளனர்.
இதையும் படிங்க : H1B Visa : எச்1பி விசாவி கட்டண உயர்வு.. மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா முடிவு?
கழுத்தை அறுத்து கொலை செய்த இந்திய இளைஞர்
பிரம்மர் வசித்து வந்த அதே பகுதியில் இந்திய வம்சாவளியான வருண் சுரேஷ் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். அவர் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியாளரை போல வேடமிட்டு பிரம்மரை தேடி வந்துள்ளார். பிரம்மர் வீட்டின் கதவை திறந்ததும் நான் சரியான நபரை தான் தேடி வந்துள்ளேன் என்று கூறியுள்ளார். அப்போது அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரம்மரின் கழுத்தில் குத்தியுள்ளார். அதனால் அதிர்ந்துப்போன அவர் உயிரி பிழைத்துக்கொள்வதற்காக தப்பி ஓடியுள்ளார்.
இதையும் படிங்க : ரஷ்ய போருக்கு காரணம்… ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் – டிரம்ப் அழைப்பு
ஆனால் அவரை விடாமல் துரத்திச் சென்ற அந்த இளைஞர் பிரம்மரின் பக்கத்து வீட்டு சமையலறையில் வைத்து அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில், பாலியல் குற்றவாளிகள் அனைவருமே சாக வேண்டியவர்கள்தான். அவர்களை கொலை செய்வது எனது கடமை. இது வேடிக்கையாக இருந்தது என்று அவர் வாக்குமூளம் அளித்துள்ளார்.
அமெரிக்காவில் பாலியல் குற்றவாளிகளின் பட்டியல் பராமரிக்கப்பட்டு அது பொதுமக்கள் பார்வைக்கும் கிடைக்கும் நிலையில், அந்த பதிவேட்டில் இருந்த தகவல்களை அடிப்படையாக கொண்டு அந்த நபர் இந்த கொலையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.